Nov 17, 2026 - 02:06 PM

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி, ராவல்பிண்டியில் நடைபெற்றுவரும் 2ஆவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் தடுமாறி வெறும் 98 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.
இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணிக்கு தொடக்கத்திலேயே பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடி அளித்தனர்.
சாதகமான சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்ட பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள், இலங்கை வீரர்களை அடுத்தடுத்து ஆட்டமிழக்க செய்தனர்.
இலங்கை அணி சார்பில் தலைவர் குசல் மெண்டிஸ் 32 ஓட்டங்களையும், சொனால் தினுஷ 21 ஓட்டங்ளையும் கூடுதலாக எடுத்தனர். ஏனைய முன்னணி வீரர்கள் அனைவரும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
குறிப்பாக, அணியின் மூத்த வீரர்களான தினேஷ் சந்திமால், கமிந்து மெண்டிஸ் மற்றும் தனஞ்சய டி சில்வா ஆகியோர் பாகிஸ்தானின் துல்லியமான பந்துவீச்சில் விரைவில் விக்கெட்டுகளைப் பறிகொடுத்தனர்.
இறுதியில் அசித பெர்னாண்டோ ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழக்காமல் இருக்க, இலங்கை அணி 35.3 ஓவர்களில் 98 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
பாகிஸ்தான் தரப்பில் அபாரமாகப் பந்துவீசிய மொஹமட் அப்பாஸ் 6 மேடின்களுடன் 14 ஓவர்கள் வீசி, 14 ஓட்டங்களை மாத்திரம் கொண்டுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அவருடன் ஆமிர் ஜமால் மற்றும் ரசாமுல்லா ஆகியோரும் தலா 3 விக்கெட்டுகளையும், சாகிப் கான் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றி இலங்கை அணியை நிலைகுலையச் செய்தனர்.
தற்போது முதல் இன்னிங்ஸை முடித்துக்கொண்டு இலங்கை அணி பந்துவீச்சுக்குத் தயாராகி வரும் நிலையில், பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கவுள்ளது.

































