Nov 20, 2026 - 10:18 AM

பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் இன்னிங்ஸில் இலங்கை அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 316 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணிக்கு, ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது.
முதல் 10 ஓட்டங்களுக்குள் லஹிரு உதார (7) மற்றும் அனுபவ வீரர் தினேஷ் சந்திமால் (0) ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்து இலங்கை அணி தடுமாறியது.
தொடர்ந்து கமிந்து மெண்டிஸ் (16) ஆட்டமிழக்க, 39 ஓட்டங்களுக்குள் 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்து இலங்கை அணி இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டது.
இந்நிலையில் இக்கட்டான சூழ்நிலையில் கைகோர்த்த தனஞ்சய டி சில்வா (37) மற்றும் பசிந்து சூரியபண்டார (38) ஆகியோர் ஓரளவு நிதானமாக ஆடி அணியைச் சரிவிலிருந்து மீட்க முயன்றனர்.
அதன் பின்னர் களமிறங்கிய அணித்தலைவர் குசல் மெண்டிஸ், 126 பந்துகளை எதிர்கொண்டு 8 பவுண்டரிகளுடன் 53 ஓட்டங்களைப் பெற்று பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தும் பொறுப்பை ஏற்ற சொனால் தினுஷ (54 ஓட்டங்கள்) மற்றும் பின்வரிசையில் அதிரடியாக ஆடிய மிலன் ரத்நாயக்க 88 பந்துகளில் 12 பவுண்டரிகளை விளாசிய மிலன் ரத்நாயக்க இறுதிவரை ஆட்டமிழக்காமல் 66 ஓட்டங்களைக் குவித்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை 300-ஐக் கடக்கச் செய்தார்.
பாகிஸ்தான் தரப்பில் அனுபவ வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் அப்பாஸ் 34 ஓவர்கள் வீசி 15 ஓவர்களை ஓட்டமற்ற ஓவர்களாக மாற்றியதுடன், 55 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
அவருக்குத் துணையாக அமீர் ஜமால் 3 விக்கெட்டுகளையும், ரசவுல்லா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இறுதியில், இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 316 ஓட்டங்களை எடுத்தது.
இதன்மூலம் பாகிஸ்தான் அணிக் 80 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

































