Nov 20, 2026 - 10:56 AM

க்ரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளின் முன்னேற்றத்தை டிசம்பர் மாதம் 01 ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (20) உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபரான நாமல் ராஜபக்ஷ சிறைச்சாலையில் இருந்தால், அன்றைய தினம் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ்.போதரகம இதன்போது உத்தரவிட்டார்.
சந்தேகநபரான ஜானகி சிறிவர்தனவை அன்றைய தினம் வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

































