Nov 20, 2026 - 11:57 AM

ஊழல் குற்றச்சாட்டொன்று தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்கவின் பிணை மனுவை கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (20) நிராகரித்துள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகமவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பொஸ்பேட் ஏற்றுமதி செய்வதற்காக மூன்று தனியார் நிறுவனங்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு 81 இலட்சம் ரூபாய் இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பிலேயே சாமர சம்பத் தஸநாயக்க நீதிமன்றத்தில் இன்றைய தினம் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.

































