Nov 20, 2026 - 03:17 PM

மூச்சுத் திணறல் காரணமாக மஸ்கெலியா புனித ஜோசப் தேசிய பாடசாலையின் 36 மாணவர்கள் இன்று (20) மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று (20) காலை 8.45 மணியளவில் மஸ்கெலியா புனித ஜோசப் தேசிய பாடசாலையின் ஆரம்பப் பிரிவில் கல்வி கற்கும் 96 மாணவர்கள் காலை உணவை உட்கொண்டதன் பின்னர் வகுப்பறைகளில் இருந்த போது இந்த மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களில் 30 பேர் சிகிச்சை பெற்ற பின்னர் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், எஞ்சிய ஆறு மாணவர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

































