Nov 21, 2026 - 08:33 AM

உலகளாவிய ரீதியில் பரந்து வாழும் இலங்கைத் தொழில்முனைவோரை ஒரே டிஜிட்டல் தளத்திற்குள் கொண்டுவரும் 'உலகளாவிய இலங்கைத் தொழில்முனைவோர் கழகம்' அல்லது Global Lankan Entrepreneur Club - "GLEC" இன் ஜப்பான் மாநாட்டில் பங்கேற்பதற்காக நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்ற தொழில்முனைவோர் திலித் ஜயவீர தலைமையிலான சர்வஜன அதிகாரத்தின் சிரேஷ்ட உறுப்பினர்கள் தற்போது ஜப்பானைச் சென்றடைந்துள்ளனர்.
இந்த மாநாடு நாளை (22) ஜப்பானின் சுகுபா (Tsukuba) நகரில் நடைபெறவுள்ளது.
உலகம் முழுவதும் பரந்து வாழும் இலங்கைத் தொழில்முனைவோர் மற்றும் தொழில்வாண்மையாளர்களை ஒரே டிஜிட்டல் தளத்திற்குள் ஒன்றிணைக்கும் 'உலகளாவிய இலங்கைத் தொழில்முனைவோர் கழகம்' - "GLEC" டிஜிட்டல் தளம் அண்மையில் கொழும்பில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீரவின் எண்ணக்கருவிற்கு அமைய இந்த டிஜிட்டல் தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, "GLEC" டிஜிட்டல் தளம் குறித்து உலகெங்கிலும் வாழும் இலங்கையர்களுக்குத் தெளிவூட்டும் வேலைத்திட்டத் தொடரின் முதலாவது வெளிநாட்டு மாநாடு நாளை ஜப்பானின் சுகுபாவில் நடைபெறவுள்ளது.
































