Nov 21, 2026 - 11:35 AM

பன்னிபிட்டிய, தெபானம பிரதேசத்தில் அமைந்துள்ள பழைய இரும்பு கொள்வனவு செய்யும் வர்த்தக நிலையமொன்றில் இன்று (21) முற்பகல் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இன்று முற்பகல் 9.05 மணியளவில் இத்தீ விபத்து ஏற்பட்டுள்ளதுடன், தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக கோட்டை மாநகர சபைக்குச் சொந்தமான மூன்று தீயணைப்பு வாகனங்களும் கொழும்பு தீயணைப்புப் பிரிவிற்குச் சொந்தமான ஒரு தீயணைப்பு வாகனமும் சம்பவ இடத்திற்கு பிரவேசித்தன.
தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், தீ விபத்தினால் வர்த்தக நிலையத்திற்கும் அதிலிருந்த பொருட்களுக்கும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
இந்தச் சம்பவத்தில் எவ்வித உயிரிழப்புகளும் பதிவாகவில்லை எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும், தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹரகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
































