செய்திகள்
O/L பரீட்சையில் முதல் 10 இடங்களில் ஒரே ஒரு மாணவன்!

Sep 30, 2024 - 11:03 AM -

0

O/L பரீட்சையில் முதல் 10 இடங்களில் ஒரே ஒரு மாணவன்!

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர  சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளில் முதல் பத்து இடங்களில் ஒரே ஒரு மாணவர் மட்டுமே உள்ளார்.

 

மற்றைய ஒன்பது பேரும் மாணவிகள் என்பது சிறப்பம்சமாகும்.

 

அந்த 10 பேரில் மாத்தறை ராகுல வித்தியாலயத்தில் கல்வி கற்கும் சகுன சதீஷன் சமரவிக்ரம அந்த மாணவர் ஆவார்.

 

சகுன  பாடசாலை மாணவர் தலைவராகவும், கேடட் அணி மற்றும் சாரணர் குழுவில் உறுப்பினராகவும், பாடசாலை நடனக் குழுவின் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

 

இவ்வளவு சுறுசுறுப்பான மாணவனாக இருந்தும், சகுன எதிர்கொண்ட மிகப் பெரிய சவால் என்னவென்றால், டெங்கு நோயால் பாதிக்கப்பட்டு, சாதாரண தரப்  பரீட்சை தொடங்குவதற்கு சில தினங்களுக்கு முன்னர் மாத்தறை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற வேண்டியிருந்தது.

 

எனினும், மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில், உறுதியாக இருந்த சகுன, பரீட்சைக்கு முந்தைய நாள் வீட்டுக்கு சென்று பரீட்சையை எதிர்கொண்டு வெற்றியீட்டியுள்ளார்.

 

நோய் நிலையிலும் பரீட்சையை எழுதி சிறந்த பெறுபேற்றை பெற்றுள்ள சகுன சதீஷன் சமரவிக்ரம, பல மாணவர்களுக்கு முன்னுதாரணமாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ
01
02
03
04
05