Sep 30, 2024 - 11:55 AM -
0
NDB வங்கியானது இந்த ஆகஸ்ட் மாதம் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் [BMICH ] நடைபெற்ற கௌரவமிக்க இசை மற்றும் நடன மாலை நிகழ்வான பாவா நிகழ்ச்சிக்கு புனித பீட்டர்ஸ் கல்லூரியுடன் இணைந்து பிரதான அனுசரணையாராக விளங்கியதில் பெருமிதம் கொள்கிறது. இளம் கலைஞர்கள் தங்கள் கலைத்திறன் மற்றும் கலாசார மரபுகள் மீதான ஆர்வத்தை வெளிப்படுத்துவதற்கு ஒரு தளத்தினை வழங்கியஇந்நிகழ்வில் கல்லூரியின் திறமையான ஓரியண்டல் இசைக்குழு மற்றும் பாடகர் குழுவின் நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
மூகம் சார்ந்த கலாசார மற்றும் இளைஞர் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் NDB இன் தற்போதைய முயற்சிகளுடன் ஒத்துப்போவதாக தன் ஆழமான வடிவ வெளிப்பாட்டைக் குறிப்பதாக அமைந்திருந்த புனித பீட்டர்ஸின் பாவா நிகழ்வானது இளைஞர் யுவதிகள் மத்தியில் திறமைகள் வளரக்கூடிய வழிகளை விருத்தி செய்வதில் வங்கியின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தது.
பாவா நிகழ்விற்கு ஆதரவளிப்பதானது இளைஞர்கள் சிறந்து விளங்கக்கூடிய மற்றும் அவர்களின் ஆர்வங்களை ஏற்றுக்கொள்ளக்கூடிய தளங்களை வழங்குவதன் மூலம் அவர்களை வலுவூட்டுவதற்கான NDB வங்கியின் அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாகும் என NDB இன் பிரதம நிறைவேற்றதிகாரியான கெலும் எதிரிசிங்க கருத்து தெரிவித்தார். தலைமைத்துவம் வகிப்பதற்கும் புத்தாக்கமாகவிருப்பதற்குமாக எமது இளைஞர்கள் கொண்டிருக்கும் ஆற்றலை நாம் மதிப்பதுடன் இதைப் போன்ற துவக்கங்களின் மூலம் அவர்களது அற்றல்களை மாத்திரமன்றி அவர்களது எதிர்காலத்தையும் வளர்த்தெடுப்போம் என நம்புகின்றோம். இளைஞர்கள் ஒரு வளமான சமுதாயத்தை அபிவிருத்தி செய்யும் பிரதான தூண்களாக திகழ்வதால், அவர்களிடம் முதலீடு செய்வது அவசியம். என அவர் மேலும் தெரிவித்தார்.
பாவா போன்ற நிகழ்வில் NDB வங்கியின் ஈடுபாடானது வெறுமனே ஒரு பங்குடைமை என்பதற்கும் அப்பாற்பட்டு - இது இளைஞர்களின் முழுமையான வளர்ச்சியை அபிவிருத்தி செய்வதில் வங்கியின் அர்ப்பணிப்பின் பிரதிபலிப்பாகும். இந்த ஒத்துழைப்பின் மூலம், NDB ஆனது இளைஞர்களுடன் இணைந்து செயற்படுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, NDB அவர்களின் நிதிகளை எளிதாகவும் பாதுகாப்பாகவும் முகாமைத்துவம் செய்வதற்கான சாத்தியக்கூறுகளை அவர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது.
இளைஞர்களின் தனிப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள NDB இன் ZEE மற்றும் ஷில்பா கணக்குகள் போன்ற வங்கியின் புதுமையான வங்கியியல் தீர்வுகளை அறிமுகப்படுத்த இந்த நிகழ்வு NDBக்கு வாய்ப்பினையுமளித்தது.
இளைஞர்களை மையமாகக் கொண்ட முயற்சிகளுக்கு NDB தொடர்ந்து ஆதரவளித்து வரும் நிலையில், இலங்கையின் இளைஞர்களுக்கான ஆற்றல்மிக்க எதிர்காலத்தை வடிவமைப்பதில் வங்கியின் வகிபாகத்திற்கு பாவா ஒரு சான்றாக விளங்குகிறது.
NDB வங்கி இலங்கையில் நான்காவது பாரிய பட்டியலிடப்பட்ட வணிக வங்கியாகும். ஆசிய வங்கியியல் மற்றும் நிதி சில்லறை வங்கியியல் விருதுகள் 2023 இல் ஆண்டின் சிறந்த சில்லறை வங்கி (இலங்கை) மற்றும் Asiamoney ஆல் சிறந்த கூட்டாண்மை வங்கி 2023 என பெயரிடப்பட்டது. மேலும் 2022 ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக இரண்டாவது வருடமாக இலங்கையில் அதிக விருதுகளைப் பெற்ற நிறுவனமாக இலங்கையின் LMD சஞ்சிகையினால் வருடாந்த தரவரிசையில் வரிசைப்படுத்தப்பட்டது.Global Finance USA மற்றும் Euromony ஆகியவற்றின் வருடாந்த சிறந்த வங்கி விருது நிகழ்ச்சிகளில் 2022 இல் இலங்கையின் சிறந்த வங்கியாக தெரிவு செய்யப்பட்டது. மேலதிகமாக , USA யிலுள்ள கிரேட் பிளேஸ் டு வொர்க்அமைப்பினால் இலங்கையில் 2022 இல் சிறந்த 50 பணியிடங்களில் ஒன்றாக பெயரிடப்பட்டது. NDB என்பது NDB குழுமத்தின் தாய் நிறுவனமாகும்,இது மூலதன சந்தை துணை நிறுவனங்களை உள்ளடக்கியநிலையில் ஒரு தனித்துவமான வங்கியியல் மற்றும் மூலதன சந்தை சேவைகள் குழுவை உருவாக்குகிறது. டிஜிட்டல் வங்கியியல் தீர்வுகளினை பயன்படுத்தி அர்த்தமுள்ள நிதி மற்றும் ஆலோசனை சேவைகள் மூலம் தேசத்தையும் அதன் மக்களையும் மேம்படுத்துவதற்கு வங்கி உறுதிபூண்டுள்ளது.