Sep 30, 2024 - 12:21 PM -
0
கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்து இன்று வெள்ளித்திரை வரை பிரபலமாகியுள்ளார் அறந்தாங்கி நிஷா.
நடிகை மட்டுமின்றி இவர் சிறந்த மேடை பேச்சாளரும் கூட என்பதை நாம் அனைவரும் அறிவோம். இந்த நிலையில் அறந்தாங்கி நிஷா, திடீரென விஜய் டிவியில் இருந்து வெளியேறிவிட்டார் என கூறி அதிர்ச்சித் தகவல் ஒன்று இணையத்தில் வெளிவந்தது.
இணையத்தில் யாரோ இது குறித்து தகவல் பரவி வந்த நிலையில், அதிர்ச்சியடைந்த அறந்தாங்கி நிஷா, இதுகுறித்து பதிவு ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது வதந்தி என தெரிவித்துள்ளார்.
"யாரு பார்த்த வேலை சாமி இது, ரொம்ப கஷ்டப்பட்டு இந்த இடத்துக்கு வந்தேன் டா உங்களால என்ன பண்ண முடியுமோ அதை பண்ணிட்டு இருக்கீங்க" என அவர் கூறி இருக்கிறார்.