விளையாட்டு
IPL 2025 இல் தோனி விளையாடுவது உறுதி!

Sep 30, 2024 - 12:42 PM -

0

IPL 2025 இல் தோனி விளையாடுவது உறுதி!

2025 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியில் மகேந்திர சிங் தோனி விளையாடுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. 

 

ஐபிஎல் நிர்வாகக் குழு அறிவித்த புதிய விதிகள் இதை உறுதி செய்துள்ளன. அவர் சம்பளமாக ரூ.4 கோடியைப் பெறுவார் என்று தெரியவந்துள்ளது.

 

தோனி, சர்வதேச போட்டியில் விளையாடி (டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20) சரியாக ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. 

 

தற்போது அவர் பிசிசிஐ ஒப்பந்தத்தில் கூட இல்லை. இந்நிலையில்தான் ஐபிஎல் விதிகளில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

 

அதன்படி ‘அன்கேப்டு பிளேயராக’ தோனி அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

 

வரும் டிசம்பரில் நடைபெறவுள்ள மெகா ஏலத்துக்கு முன்னதாக 6 வீரர்களை ஒவ்வொரு அணியும் தக்க வைக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. 

 

அதன் காரணமாக நிச்சயம் தோனி 6 வீரர்களில் ஒருவராக சென்னை அணியில் தக்கவைக்கப்படுவார் என்பது உறுதியாகியுள்ளது. 

 

தற்போது ரூ.12 கோடி ரூபாய் ஊதியமாக பெற்று வரும் தோனி ‘அன்கேப்டு’ வீரராக தக்க வைக்கப்படும் பட்சத்தில் அவரது ஊதியத்தில் இருந்து 66.67% சம்பளம் குறைக்கப்படும். 

 

அதாவது இந்திய மதிப்பில் ரூ.12 கோடி சம்பளமாக பெற்று வரும் அவர், அடுத்த சீசனில் ரூ.4 கோடி ஊதியமாக பெறுவார் எனத் தெரிகிறது.

Comments
0

MOST READ
01
02
03
04
05