சினிமா
'தளபதி 69' படத்தின் நாயகி மஞ்சு வாரியர்?

Sep 30, 2024 - 12:44 PM -

0

'தளபதி 69' படத்தின் நாயகி மஞ்சு வாரியர்?

நடிகர் விஜய் நடிக்க இருக்கும் தளபதி 69 திரைப்படத்தின் நாயகியாக மஞ்சு வாரியர் ஒப்பந்தம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

 

அஜித் நடித்த 'துணிவு' திரைப்படத்தில் மஞ்சு வாரியர் நடித்தபோது, "என்னுடைய அடுத்த படத்தில் உங்களுக்கு ஒரு நல்ல கதாபாத்திரம் தருகிறேன்" என்று இயக்குனர் ஹெச். வினோத் அவருக்கு வாக்குறுதி அளித்ததாகவும், அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக தளபதி 69 திரைப்படத்தில் மஞ்சு வாரியரை நாயகியாக ஒப்பந்தம் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

தனுஷின் 'அசுரன்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான மஞ்சு வாரியர், அதன் பின்னர் அஜித்துடன் துணிவு படத்தில் நடித்தார்.ஒக்டோபர் 10 ஆம் திகதி வெளியாக இருக்கும் ரஜினியின் "வேட்டையன்" படத்திலும் நடித்துள்ளார். 

 

இந்நிலையில், தற்போது விஜய்யின் தளபதி 69 படத்திலும் நடிக்க இருப்பதால், குறுகிய காலத்தில் அஜித், விஜய், ரஜினி, தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். இதனையடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

 

தளபதி 69 படத்தில் மஞ்சு வாரியர் இணையும் தகவல் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments
0

MOST READ
01
02
03
04
05