Sep 30, 2024 - 01:28 PM -
0
NDB வங்கி தனது யூடியூப் சேனலில் 100,000 சந்தாதாரர்களை எட்டிய முதல் இலங்கை வங்கியாக மாறியதன் மூலம் இலங்கையில் புதிய எண்ணிம மைல்கல்லை எட்டியுள்ளமையானது வங்கியின் புத்தாக்கத்திற்கான அர்ப்பணிப்பினை வெளிப்படுத்தியுள்ளதுடன் வாடிக்கையாளர்களுடன் தொடர்பிலிருக்கும் அதனது முதலாவது எண்ணிம அணுகுமுறையானது இலங்கையின் வங்கித்துறையில் புதிய பாதையாகவும் அமைந்துள்ளது.
அதன் பார்வையாளர்களுடன் இணையும் வகையில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதில் முன்னணியில் உள்ள NDB வங்கியின் யூடியூப் சேனலானது, மதிப்புமிக்க நிதியியல் கல்வி, நுண்ணறிவு மற்றும் வங்கியின் பரந்த அளவிலான தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய இற்றைப்படுத்தப்பட்ட தகவல்களை வழங்கும் தகவல் மற்றும் ஈர்க்கும் உள்ளடக்கத்தின் மையமாக மாறியுள்ளது. NDBயின் இந்த யூடியூப் சேனல் உள்ளடக்கத்திற்கு, இலங்கையில் 96% க்கும் அதிகமான சந்தாதாரர்கள் உள்ளனர், முக்கியமாக 25-34 வயதுக்குட்பட்டவர்கள் இதில் முன்னிலை வகிப்பதுடன் , அதைத் தொடர்ந்து 35-44 வயதுக்குட்பட்டவர்கள் நெருக்கமாக தொடர்பவர்களாகவும் இருக்கின்றனர் . சக்தி வாய்ந்த வீடியோ உள்ளடக்கம் மூலம், NDBயானது தகவலறிந்த முடிவுகளை எடுக்க பார்வையாளர்களுக்கு உதவுவதன் மூலம் தொழில்சார் நிதியியல் அறிவுடன் அவர்களை வலுப்படுத்துகிறது.
இந்த எண்ணிம மைல்கல்லானது, வளர்ந்து வரும் எண்ணிம பிரிவில் NDB முன்னணி வகிப்பதற்கான சான்றுகளில் ஒன்றாகும். யூடியூப்பிற்கு அப்பால், வங்கியானது Facebook, Instagram, TikTok மற்றும் LinkedIn ஆகியவற்றில் இந்த தளங்களைப் பயன்படுத்தி சரியான நேரத்தில் தகவல்களை வழங்கவும் அதன் வாடிக்கையாளர்களுக்கு ஊடாடும் அனுபவங்களை வழங்கவும் பயன்படுத்தி செயற்படுவதிலும் முன்னிலையில் உள்ளது.
“NDB எப்போதும் எண்ணிம வங்கியியலின் அதிநவீன பாதையை நோக்கியே பயணிப்பதற்கான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது. யூடியூப்பில் 100,000 சந்தாதாரர்களை எட்டுவதானது, எங்களின் தொழில்நுட்ப ஆர்வமுள்ள வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்யும் அர்த்தமுள்ள உள்ளடக்கத்தை வழங்குவதற்கான எங்கள் தொடர்ச்சியான முயற்சியை பிரதிபலிக்கிறது,” என கூறிய NDB சந்தைப்படுத்தல் தலைவர் தர்ஷன ஜெயசிங்க அவர்கள் மேலும் இந்த சாதனை புதுமைக்கான எங்கள் அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும், மேலும் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு பெறுமதி சேர்க்கும் வகையில் எங்கள் எண்ணிம தடத்தை மேலும் விரிவுபடுத்த நாங்கள் எதிர்பார்க்கிறோம். என்றும் கூறினார்.
எண்ணிம ஈடுபாடு தொடர்ந்து வளர்ந்து வருவதால், தடையற்ற, பயனர் நட்பு மற்றும் புத்தாக்கமான நிதியியல் அனுபவங்களை வழங்குவதில் NDB வங்கி முன்னணியில் உள்ளது.
இந்தச் சாதனையுடன், NDB வங்கியானது இலங்கையின் நிதித் துறையில் ஒரு முன்னணி நிறுவனமாக மட்டுமன்றி, எண்ணிம யுகத்தில் வாடிக்கையாளர் ஈடுபாட்டிற்கான புதிய தரங்களை அமைத்து, எண்ணிம மாற்றத்தில் முன்னோடியாகவும் தனது நிலையை உறுதிப்படுத்துகிறது.
NDB வங்கி இலங்கையில் நான்காவது பாரிய பட்டியலிடப்பட்ட வணிக வங்கியாகும். ஆசிய வங்கியியல் மற்றும் நிதி சில்லறை வங்கியியல் விருதுகள் 2023 இல் ஆண்டின் சிறந்த சில்லறை வங்கி (இலங்கை) மற்றும் Asiamoney ஆல் சிறந்த கூட்டாண்மை வங்கி 2023 என பெயரிடப்பட்டது. மேலும் 2022 ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக இரண்டாவது வருடமாக இலங்கையில் அதிக விருதுகளைப் பெற்ற நிறுவனமாக இலங்கையின் LMD சஞ்சிகையினால் வருடாந்த தரவரிசையில் வரிசைப்படுத்தப்பட்டது. Global Finance USA மற்றும் Euromony ஆகியவற்றின் வருடாந்த சிறந்த வங்கி விருது நிகழ்ச்சிகளில் 2022 இல் இலங்கையின் சிறந்த வங்கியாக தெரிவு செய்யப்பட்டது. மேலதிகமாக , USA யிலுள்ள கிரேட் பிளேஸ் டு வொர்க்அமைப்பினால் இலங்கையில் 2022 இல் சிறந்த 50 பணியிடங்களில் ஒன்றாக பெயரிடப்பட்டது. NDB என்பது NDB குழுமத்தின் தாய் நிறுவனமாகும்,இது மூலதன சந்தை துணை நிறுவனங்களை உள்ளடக்கியநிலையில் ஒரு தனித்துவமான வங்கியியல் மற்றும் மூலதன சந்தை சேவைகள் குழுவை உருவாக்குகிறது. எண்ணிம வங்கியியல் தீர்வுகளினை பயன்படுத்தி அர்த்தமுள்ள நிதி மற்றும் ஆலோசனை சேவைகள் மூலம் தேசத்தையும் அதன் மக்களையும் மேம்படுத்துவதற்கு வங்கி உறுதிபூண்டுள்ளது.