கிழக்கு
கட்டுப்பணம் செலுத்திய தமிழ் உணர்வாளர் அமைப்பு

Sep 30, 2024 - 02:03 PM -

0

கட்டுப்பணம் செலுத்திய தமிழ் உணர்வாளர் அமைப்பு

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான முதலாவது கட்டுப்பணம் இன்று (30) செலுத்தப்பட்டது.

 

மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் சார்பாக அதன் தலைவர் கணபதிப்பிள்ளை மோகனால் குறித்த கட்டுப்பணம் செலுத்தப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

 

இம்முறை தமிழ் உணர்வாளர் அமைப்பின் சார்பாக சுயேட்சையாக களமிறங்கவுள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்டத்தின் மூன்று தேர்தல் தொகுதிகளிலும் எட்டுப் பேரை களமிறக்கவுள்ளதாவும் தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் தெரிவித்தார்.

 

ஊழல்கள், மோசடிகள் அற்ற அரசியலை முன்னெடுப்பதற்காகவே தாம் களமிறங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 

Comments
0

MOST READ
01
02
03
04
05