Sep 30, 2024 - 04:51 PM -
0
பாராளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கு விண்ணப்பங்கள் நாளை (1) முதல் 8ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 'அத தெரண' 'BIG FOCUS' நிகழ்ச்சியில் இணைந்து கொண்ட தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க, எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தொடர்பில் கருத்து வெளியிட்டார்.
பொதுத்தேர்தல் கடந்த 25ஆம் திகதி அறிவிக்கப்பட்டது. அதற்கமைய தற்போது எம்மிடம் உள்ள பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலை 8ஆம் திகதி இறுதி செய்யவுள்ளோம்.
ஜனாதிபதி தனது விருப்பத்தின் பேரில் பாராளுமன்றத்தை கலைத்ததால், அவர் இந்த தேர்தலுக்கு நிதி ஒதுக்குவதற்கு அரசியலமைப்பின் 150 (4) வது பிரிவுக்கு கட்டுப்பட்டவராவார். நாங்கள் பொதுத்தேர்தலுக்காக அவரிடம் 11 பில்லியன் கோரியிருந்தோம். ஆனால் 5 பில்லியன் வழங்குவதற்கு அவர் ஒப்புக்கொண்டார். கடந்த ஜனாதிபதி தேர்தலுக்காக எங்களுக்கு 10 பில்லியன் கிடைத்தது. எங்களுக்கு கிடைத்த நிதியில் ஒரு தொகை மீதம் வைத்துள்ளோம். எனவே இவ்விரண்டு தேர்தல்களையும் மேற்கொள்ள தற்போது கிடைத்துள்ள நிதி போதுமென நினைக்கிறோம்.
ஒக்டோபர் 4ஆம் திகதி முதல் ஒக்டோபர் 11ஆம் திகதி மதியம் 12 மணி வரை வேட்புமனுக்கள் ஏற்கப்படும். தொடர்ந்து தேர்தலில் போட்டிடும் அரசியல் கட்சிகள் மற்றும் கூட்டணிகளின் பட்டியல் வெளியிடப்படும்.