Header Logo

ஜோதிடம்
ஒக்டோபர் மாதம் உங்களுக்கு எப்படி?

Oct 1, 2024 - 08:31 AM -

0

ஒக்டோபர் மாதம் உங்களுக்கு எப்படி?

17-9-24 முதல் 17-10-24 வரையான காலப்பகுதி கடக ராசிக்கு எப்படி அமையும் என்பதை பார்க்கலாம்.

வாழ்க்கை நிலையற்றது என்பதை உணர்ந்து செயல்படும் கடக ராசி அன்பர்களே, உங்கள் ராசிக்கு 11 ல் குருவின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால், எத்தனை தடைகள் பிரச்னைகள் வந்தாலும் எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள்.

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். பொருளாதாரநிலை உங்கள் தேவைக்கு ஏற்ப உயரும். உங்களுடைய இனிய பேச்சால் மற்றவர்களை எளிதில் கவர்வீர்கள். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.

3 இல் கேது இருப்பதால் மனதில் தைரியம், தன்னம்பிக்கை, உற்சாகம் அதிகரிக்கும். தங்க ஆபரணச் சேர்க்கை உண்டு. வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி உண்டு. தாய் உடல்நலத்தில் கவனம் தேவை. வீடு வாகனம் சீர்படுத்த செலவினங்கள் ஏற்படும். குழந்தைகள் செயல்பாடுகள் பெருமைப்பட கூடியதாக இருக்கும். கணவன்,மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் செல்வதால் தேவையற்ற பிரச்னைகளை தவிர்க்கலாம். வியாபாரத்தில் கூட்டாளிகளிடம் கவனம் தேவை.

வியாபார ரீதியான புதிய ஒப்பந்தங்களை தவிர்ப்பது நல்லது. எதிர்மறை சிந்தனைகளை தவிர்த்து நேர்மறை சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். தந்தை உங்கள் உயர்வுக்கு உறுதுணையாக இருப்பார். குரு மற்றும் மூத்தோரின் ஆசி கிடைக்கும்.

அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். வெளிநாட்டு தொடர்பால் ஆதாயம் உண்டு. 11 ல் குரு இருப்பதால் தொழில் மற்றும் உத்யோகத்தில் உயர்வு ஏற்படும். விடா முயற்சி மிகப்பெரிய வெற்றியை ஏற்படுத்தி தரும்.

சந்திராஷ்டம நாட்கள்: அக்டோபர் 15,16,17

பரிகாரம்: முருகப்பெருமானை திங்கட்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.

Comments
0

MOST READ

காணொளி
நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

title