Oct 1, 2024 - 08:37 AM -
0
இந்த வாரம் நினைத்த காரியத்தை நிறைவேற்றுவதில் வேகம் காட்டுவீர்கள். தொழில்கள் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ்நிலையில் உள்ளவர்களால் லாபம் உண்டாகும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் இடமாற்றம் பற்றி ஆலோசிப்பார்கள். குடும்பத்தில் இருந்த இறுக்கமான சூழ்நிலை மாறி மகிழ்ச்சியான நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையில் அன்பு அதிகரிக்கும். பெண்களுக்கு எதிலும் மிகவும் கவனமாக ஈடுபடுவது நன்மை தரும். கலைத்துறை யினருக்கு கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை தேவை.
அரசியல்துறையினருக்கு நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேறும். மாணவர்களுக்கு பாடங்களில் சந்தேகம் கேட்பதற்கு தயக்கம் காட்டாமல் இருப்பது வெற்றிக்கு உதவும்.
பரிகாரம்: முருகனுக்கு தீபம் ஏற்றி வணங்கி, கந்தர் சஷ்டி கவசம் படிக்க எல்லா பிரச்னைகளும் தீரும். காரிய வெற்றி உண்டாகும்.