Oct 1, 2024 - 01:08 PM -
0
நடிகர் ரஜினிகாந்த் வேட்டையன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வரும் 10ம் திகதி திரைக்கு வர உள்ளது. இதனை தொடர்ந்து கூலி என்ற படத்திலும் ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்திற்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வயிறு தொடர்பான பிரச்சனை காரணமாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினிகாந்துக்கு வைத்தியசாலையில் சில பரிசோதனைகள் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.