செய்திகள்
இருவேறு விபத்துக்களில் இருவர் பலி

Oct 7, 2024 - 10:18 AM -

0

இருவேறு விபத்துக்களில் இருவர் பலி

நாட்டின் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்துக்கள் நேற்று (06) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

ஹங்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கலுவக்கல லபுகம வீதியின் பல்பொல பிரதேசத்தில், கலுவக்கல திசையிலிருந்து லபுகம திசை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி அருகில் உள்ள வடிகாணில் விழுந்துள்ளது.

 

இந்த விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான சாரதியும் பின்னால் அமர்ந்து சென்றவரும் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது சாரதி உயிரிழந்துள்ளனர்.

 

பிலியந்தலை பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

 

இதேவேளை, இதன்படி கணேமுல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மோல சந்தி நுகவெல கிளை வீதியில் லொறி ஒன்றை சாரதி பின்னோக்கி செலுத்தியதில் வீதியோரம் நடந்து சென்ற பெண் மீது மோதி விபத்துக்குள்ளானதில் அவர் உயிரிழந்துள்ளார்.

 

88 வயதுடைய பொல்லத, கணேமுல்ல பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விபத்துக்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05