Oct 8, 2024 - 09:56 AM -
0
இலங்கையின் முன்னணி சானிட்டரி நாப்கின் வர்த்தகநாமமான ஈவா, கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பொலிஸூடன் இணைந்து மகஹருனு பாடம் என்ற தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் ஈவா தனமுத்து தரு - தனகெனம லொகுவேமு என்ற தலைப்பில் மாற்றியமைக்கும் கல்வி முயற்சியை தொடங்கியுள்ளது. ஈவா தனமுத்து தரு – தனகெனம லொகுவேமு முயற்சியானது, நாடெங்கும் உள்ள 3,000க்கும் மேற்பட்ட பெண்கள் பாடசாலைகளில் பெண்களின் ஆரோக்கியம், பருவமடைதல், இனப்பெருக்க ஆரோக்கியம் மற்றும் மாதவிடாய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு ஒக்டோபர் 1 ஆம் திகதி மகஹருனு பாடம் நிகழ்ச்சியின் ஆரம்பவிழா, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கல்வி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் இலங்கை பொலிஸின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இந்த முயற்சியானது பெரும்பாலும் களங்கம் மற்றும் போலியான தகவல்களால் சூழப்பட்ட கல்வித்துறையிலுள்ள உள்ள பகுதிகள் பற்றிய இடைவெளிகளை நிரப்ப வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த முயற்சியில் ஈவாவின் ஈடுபாடு, கல்வியின் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளை வலுப்படுத்தல் மற்றும் மாதவிடாய்க் காலத்தில் சாதகமான எண்ணங்களை மேம்படுத்துவதற்கான அதன் நோக்கத்தை பிரதிபலிக்கிறது. இந்த முன்முயற்சியின் ஒரு முக்கிய பகுதியாக, துஷ்பிரயோகத்தை எதிர்கொள்ளும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆதரவாக இலங்கை பொலிஸின் குழந்தைகள் மற்றும் பெண்கள் பணியகத்தால் அவசரத்தொலைபேசி எண் 109 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த எண் உள்ளடக்கப்பட்ட பேக்கேஜிங் அம்சத்துடன் ஈவா சானிட்டரி நாப்கின்களின் சிறப்புப் பதிப்பு காணப்படுவது இந்த முயற்சியின் முக்கிய பகுதியாகும். நிகழ்வில், இத்தகைய வரையடறுக்கப்பட்ட ஈவா பொதிகள் இலங்கை காவல்துறையின் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்திடம் கையளிக்கப்பட்டதன் மூலம் ஈவாவின் சமூக பொறுப்புணர்வுக்கான உறுதிப்பாடு வலுப்படுத்தப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து பேசிய ICL பிராண்ட்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி திரு. ரோனி சாக்கோ எதிர்கால சந்ததியினரை மேம்படுத்துவதற்கு கல்வி முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். இளம் உள்ளங்களுக்கு அவர்களின் உடல்கள் மற்றும் அதில் நிகழும் இயற்கை மாற்றங்கள் பற்றிய துல்லியமான அறிவை வழங்குவதன் மூலம், பருவமடைதல், மாதவிடாய் மற்றும் பெண்களின் சுகாதாரம் போன்ற விடயங்களைச் சுற்றியுள்ள தவறான எண்ணங்களை அகற்றுவதற்கு நாங்கள் உதவ முடியும், மேலும் அனைத்து இலங்கையர்களுக்கும் இது தொடர்பில் தெளிவான தகவலறிந்த ஆதரவான மற்றும் விழிப்புணர்வூட்டப்பட்ட்ட சமூகத்தை உருவாக்குவதற்கான எங்கள் தொடர்ச்சியான முயற்சிகளில் இந்த விடயம் ஒரு முக்கிய மைல்கல்லைப் பிரதிபலிக்கிறது என்று கூறினார்.
இந்தத் திட்டத்தின் ஊடாக, மாணவர்கள் அத்தியாவசியத் தகவல்களைப் பெறுவது மட்டுமின்றி, உற்சாகமான முறையில் ஒரு ஈடுபாட்டுடன் கூடிய வாழ்க்கைமுறையைக் கடைப்பிடிக்க முடியும். பொழுதுபோக்கு வீடியோக்களின் தொடர், பருவமடைதல் சிக்கல்களை எளிதாக்கும் கற்றல் செயல்முறையை சுவாரஸ்யமாகவும் தொடர்புபடுத்தக்கூடியதாகவும் அமையும். இத்தகைய வீடியோக்கள் முழுமையாக்கப்பட்டு நன்கு வடிவமைக்கப்பட்ட கையேடு ஆகும், இந்த முக்கியமான மாற்றங்களை எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய கருத்துகளாக அவை வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும், இம்முயற்சியானது நாடளாவிய ரீதியிலுள்ள பாடசாலைகளுக்கிடையேயான விவாதப் போட்டியை ஆரம்பித்து, பெண்களின் பிரச்சினைகள் மற்றும் மாதவிடாய் தடைகள் போன்ற தலைப்புகளில் சிந்தனைமிக்க விவாதங்களில் ஈடுபட மாணவர்களை ஊக்குவிக்கும். இந்த தளம் ஆரோக்கியமான, திறந்த உரையாடலை வளர்ப்பது மற்றும் பதின்ம வயதினரிடையே விழிப்புணர்வை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அவர்களின் பங்கேற்பை நினைவுகூறும் வகையில், ஒவ்வொரு மாணவரும் அவர்கள் கற்றுக்கொண்ட பாடங்களின் மதிப்பை வலுப்படுத்தும் குறியீட்டு நினைவுச்சின்னத்தைப் பெறுவார்கள்.
ஈவா தனமுத்து தரு - தனகெனம லொகுவேமு மூலம் மாதவிடாய் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியத்தைச் சுற்றியுள்ள கட்டுக்கதைகள் மற்றும் தவறான எண்ணங்களை களைவதை ஈவா நோக்கமாகக் கொண்டுள்ளது. குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராகப் பேசக்கூடிய பாதுகாப்பான சூழலை உருவாக்கவும், கர்ப்பம் மற்றும் அது தொடர்பான பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த முயற்சி முயல்கிறது.
இன்டர்நேஷனல் காஸ்மெட்டிக்ஸ் (பிரைவேட்) லிமிடெட் (ஐசிஎல்) இன் முதன்மை வர்த்தக நாமமாக, ஈவா அதிகபட்ச வசதி மற்றும் சுகாதாரத்திற்காக வடிவமைக்கப்பட்ட புதுமையான தயாரிப்புகளுடன் 36 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை சந்தையை தொடர்ந்து வழிநடத்தி வருகிறது. நாடு முழுவதும் அதிகமான பெண்களை அடைந்து, மாதவிடாய்க் கல்வியை மேம்படுத்துவதற்கும் பெண்கள் மற்றும் சிறுமிகளின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கும் ஈவாவின் அர்ப்பணிப்பு இந்த முயற்சியின் மூலம் மேலும் வலுப்படுத்தப்படுகிறது.