பல்சுவை
நிர்வாண படம் எடுத்து பணம் பறித்த பெண்!

Oct 8, 2024 - 10:55 AM -

0

நிர்வாண படம் எடுத்து பணம் பறித்த பெண்!

இந்தியாவின் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இளைஞர்களை குறிவைத்து ஹனி ட்ராப் மூலம் பணமோசடியில் ஈடுபட்ட பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

 

28 வயதான ஜாய் ஜமீமா என்ற பெண் இன்ஸ்டாகிராம் மூலம் பணக்கார இளைஞர்களை குறிவைத்து பணம் பறித்துள்ளார்.

 

பணக்கார இளைஞர்களிடம் இன்ஸ்டாகிராமில் பேசி பழகி வீட்டுக்கு வரவைத்து போதை வஸ்து கொடுத்து, ஆடைகள் இன்றி புகைப்படம் எடுத்துள்ளார். பின்னர் பாதிக்கப்பட்ட இளைஞர்களை மிரட்டி பணம் பறித்துள்ளார்.

 

வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பொலிஸார் இப்பெண்ணை கைது செய்துள்ளனர். 

 

கைதான ஜாய் ஜமீமாவிடம் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் புகாரளிக்க முன்வர பொலிஸார் அழைப்பு விடுத்துள்ளனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05