Oct 8, 2024 - 11:31 AM -
0
சிட்னியில் இருந்து டோக்கியோ செல்லும் குவாண்டாஸ் விமானத்தில், பயணிகளின் திரைகளில் ஆபாச படம் ஒளிபரப்பப்பட்டதால் அவர்கள் பெரும் சங்கடத்துக்குள்ளாகினர்.
விமானத்தில் குழந்தைகளுடன் குடும்பத்தினருடன் பயணம் செய்த பயணிகள் மத்தியில் பெரும் சிக்கலாக மாறியது. குறிப்பாக, அந்த படத்தை நிறுத்த அல்லது மாற்றும் ஆப்ஷன் இல்லை என்பதாலும், அவர்கள் திருப்பிச் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
விமானத்தில் இருந்த ஒரு பயணி தெரிவிக்கையில்,
“இந்தக் காட்சிகள் பரபரப்பாக இருந்ததால் எங்கள் குழந்தைகளைப் பாதுகாப்பது சிரமமாக இருந்தது. இது எல்லோரும் நெருக்கடியில் சிக்கக் காரணமாக அமைந்தது” எனக் தெரிவித்தார்.
இது குறித்து விமான நிறுவனத்தைத் தொடர்பு கொண்டதும், சில பயணிகளும் கோபம் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குவாண்டாஸ் விமான நிறுவனம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
தொழில்நுட்ப கோளாறுகளால் பயணிகள் தங்களுக்கு விருப்பமான திரைப்படங்களைத் தேர்ந்தெடுக்க முடியாத நிலை ஏற்பட்டது என்று கூறியுள்ளது.
நிறுவனம், இத்தகைய நிகழ்வுகளுக்காக வருத்தம் தெரிவிப்பதோடு எப்போதும் சரியான முறையில் அனைத்து வசதிகளையும் வழங்குவதாக உறுதியளித்தது.