Oct 8, 2024 - 12:08 PM -
0
இலங்கையின் முன்னணி ரியல் எஸ்டேட் வடிவமைப்பாளர்களான Prime குரூப், பெருமளவு எதிர்பார்ப்புகள் நிறைந்த YOLO செயற்திட்டத்தின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்துள்ளதாக அறிவித்துள்ளது. கிரிபத்கொட நகரில் நிர்மாணிக்கப்படும் மிகப் பெரிய மற்றும் சொகுசான நவீன வீட்டு தொடர்மனை நகர் திட்டமாக இது அமைந்துள்ளது.
பிரத்தியேகமான வாழிட அனுபவத்துக்கான அடிக்கல் நாட்டும் வைபவத்துடன், நிர்மாணப் பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டிருந்தன. கொழும்பு நகரின் வானுயர்ந்த கட்டிடங்களில் ஒன்றாக அமைந்திருக்கும் என்பதுடன், பிரத்தியேகமான சமூகத்தில் புதிய நியமங்களை ஏற்படுத்துவதாகவும் அமைந்திருக்கும். YOLO செயற்திட்டத்தின் நிர்மாணப் பணிகள் உயர் தர நிர்ணயங்களுக்கமையவும், நீடித்து நிலைத்திருக்கும் வகையிலும் முன்னெடுக்கப்படும். இந்த அடிக்கல் நாட்டும் நிகழ்வில் Prime குரூப்பின் தவிசாளரும் இணை தலைமை அதிகாரியும், விசேட விருந்தினர்கள் மற்றும் எதிர்கால உரிமையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Prime Lands (Pvt) Ltd இன் பிரதம நிறைவேற்று அதிகாரி ருமிந்த ரந்தெனிய இந்த செயற்திட்டம் தொடர்பில் குறிப்பிடுகையில், “YOLO திட்டத்துக்கான அடிக்கல் நாட்டலுடன், நிர்மாணப் பணிகளை நாம் ஆரம்பித்துள்ளோம். இலங்கையில் எதிர்கால நவீன வாழிட அனுபவத்தை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான நோக்கத்தை நாம் அறிமுகப்படுத்தியுள்ளோம். நாம் வாக்குறுதியளித்தவற்றுக்கு அப்பால் சென்று மேலும் பல அம்சங்களை வழங்குவதற்கு எம்மை அர்ப்பணித்துள்ளோம். எமது பிரத்தியேகமான 1% கொடுப்பனவு திட்டம், முதல் தடவை வீட்டு உரிமையாளர்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் சிறந்த வசதியாக அமைந்துள்ளது. முன்னரைவிட சொத்தின் உரிமையாண்மையை கொண்டிருப்பது என்பது இலகுவாக்கப்பட்டுள்ளது. புத்தாக்கமான வழிமுறை என்பது Prime குரூப்பின் உறுதியான நிதித் தன்மையுடன் சாத்தியமானதாக அமைந்துள்ளது.” என்றார்.
கிரிபத்கொட நகரில் அமைந்துள்ள YOLO, 13 ஏக்கர் காணியில் 473 வீட்டுத் தொகுதிகளை கொண்டிருக்கும். இதில் பல முதன்மையான அம்சங்கள் அடங்கியிருக்கும். அவற்றில் infinity pool, a premier bowling alley - முதலாவது வதிவிட தொடர்மனை அங்கம், வெளியக திரையரங்கு அனுபவத்தை வழங்கும் சினிமா, coffee workspace, fire pit ஐ கொண்ட elevated lounge, பசுமையான தோட்டம், Karaoke Bar, a gym மற்றும் CrossFit centre, single bounce peddle court, நாணயத்தினால் இயங்கப்படும் லோண்டரி மற்றும் மினி மார்ட் ஆகியன அடங்கியிருக்கும். இந்தத் திட்டத்தின் இல்லமொன்றின் உரிமையாளராக விரும்புவோர் மற்றும் ஆர்வமுள்ள முதலீட்டாளர்கள் YOLO வின் விற்பனை Galleryக்கு விஜயம் செய்து, தமக்குரிய பகுதியை ஒதுக்கிக் கொள்ளுமாறு அழைக்கப்பட்டுள்ளனர். புத்தாக்கமான அலங்கார வடிவமைப்பு, அமைவிடம், நெகிழ்ச்சியான கொடுப்பனவு தெரிவுகள் போன்றவற்றுடன் கொழும்பின் ரியல் எஸ்டேட் சந்தையில் YOLO ஒப்பற்ற வாய்ப்பை பிரதிபலிக்கின்றது.
மேலதிக தகவல்களுக்கு அல்லது YOLO இல் வதிவிடத்தை பெற்றுக் கொள்வதற்கு, Prime குரூப்பை 0702 041 041 ஊடாக தொடர்பு கொள்ளவும் அல்லது விஜயம் செய்யவும் www.primelands.lk