Oct 8, 2024 - 01:38 PM -
0
உலகளாவிய கட்டடக்கலையின் தலைமைத்துவத்திற்கு மாணவர்களைத் தயார்ப்படுத்தும் நோக்கில் நவீன தொழில்நுட்பங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ள சட்டப்பின்படிப்புப் பட்டமான SLIIT இன் கட்டடக்கலை MSc பட்டக் கல்வி SLIIT நிறுவனத்தின் கட்டடக்கலைப் பிரிவினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கட்டடக்கலைத் துறையில் அதிகரித்துவரும் தேவையைப் பூர்த்திசெய்யும் வகையில் SLIIT இன் கட்டடக்கலை MSc பட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. PhD மட்டத்தில் மேலும் ஆய்வுகளை மேற்கொள்வதற்குத் தேவையான தயார்ப்படுத்தல்களையும் பட்டதாரிகள் பெற்றுக்கொள்வார்கள். இரண்டு வருடத்தைக் கொண்ட இந்த முதுமானிப் பட்டமானது புகழ்பெற்ற ஐக்கிய இராச்சியத்தின் ஜோன் மூர்ஸ் பல்கலைக்கழகத்துடன் (LJMU) இணைந்து வழங்கப்படுகின்றது. இந்தக் பட்டக் கல்வித்திட்டமானது Royal Institute of British Architects (RIBA) இன் அங்கீகாரத்தைப் பெற்றிருப்பதுடன், இலங்கை கட்டடக்கலை நிறுவனத்தின் Candidate Program திட்டத்துக்கான அந்தஸ்தையும் பெற்றுள்ளது.
அத்துடன், இன் கட்டடக்கலைப் பிரிவானது சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. Global INSPIRELI World Architecture University தரப்படுத்தல் 2022-2023 இல் இதற்கான அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்தப் பிரிவானது உலகளாவிய ரீதியில் முதல் 100 நிறுவனங்களுக்குள் காணப்படுவதுடன், உலகரீதியாக உள்ள 1320 நிறுவனங்களில் 22 வது இடத்தைப் பிடித்துள்ளது. LJMU இனால் வழங்கப்படும் இரண்டு வருடங்களைக் கொண்ட இந்தப் பட்டக்கல்வியான விரிவான கல்வி அனுபவத்தை உறுதிப்படுத்துவதுடன், இதற்கான பதிவுகளை SLIIT அல்லது LJMU இல் நேரடியாக மேற்கொள்ள முடியும்.
கட்டடக்கலையில் LJMU இன் BSc (Hons) பட்டம் அல்லது RIBA பகுதி 1 அல்லது SLIA பகுதி 1 அல்லது கட்டடக்கலையின் இளமானி மட்டத்திலான பட்டம் (குறைந்தது 3 வருடங்கள்) பெற்றவர்கள் SLIIT இல் கட்டடக்கலை பட்டப்பின்பட்டத்துக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்களாவர்.
உலகளாவிய ரீதியில் காணப்படும் கட்டடக்கலையின் சூழலுக்குத் தேவையான திறனைப் பெறக்கூடிய வகையிலான மாணவர்களை உருவாக்கும் வகையிலேயே இதற்கான பாடநெறி தயாரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பட்டய கட்டடக்கலை நிபுணர்களின் கீழ் கனிஷ்ட கட்டடக்கலை நிபுணர்களாக மற்றும் அரசாங்க நிறுவனங்களில் இணைந்துகொள்ளக் கூடியதாகவும், எதிர்காலத்தில் மேலதிக படிப்புக்களை மேற்கொண்டு மட்டத்தில் ஆய்வுகளை முன்னெடுப்பதற்குத் தயார்ப்படுத்தக் கூடியவர்களாகவும் பட்டதாரிகளை உருவாக்கும் வகையில் இந்தப் பாடநெறி வடிவமைக்கப்பட்டுள்ளது. கட்டடக்கலையில் MSc பட்டத்துடன் இலங்கை கட்டடக்கலை நிறுவனத்தினால் நடத்தப்படும் பகுதி 1 மற்றும் பகுதி 2 ஆகியவற்றை கண்காணிக்கப்பட்ட பயிற்சிக் காலத்தைப் பூர்த்திசெய்தால் பட்டய கட்டடக்கலையின் பகுதி 3 ஐ நோக்கி மாணவர்கள் முன்னேற முடியும்.
கட்டடக்கலையில் MSc பட்டமானது சிக்கலான வடிவமைப்பு முன்மொழிவுகளின் வளர்ச்சி மற்றும் சமகால கட்டடக்கலை சிக்கல்கள் பற்றிய ஆழமான புரிதல் ஆகியவற்றை மாணவர்கள் பெற்றிருப்பதை உறுதி செய்கிறது. வடிவமைப்பு முன்மொழிவுகளை பகுப்பாய்வு செய்வதற்கும் விளக்குவதற்கும் அவர்கள் பரந்த அளவிலான பார்வை, வரைகலை, வாய்வழி மற்றும் ஊடங்களில் எழுதக்கூடியவர்களாக நிபுணத்துவம் பெறச்செய்யும்.
கட்டுமானங்களுக்குப் பொருந்தக்கூடிய பொருட்கள், செயல்முறைகள் மற்றும் நுட்பங்களை மதிப்பீடு செய்வதில் நிபுணத்துவம் வாய்ந்தவர்களாக மாணவர்கள் சித்தப்படுத்தப்படுவதுடன், அவற்றின் மூலம் நடைமுறைக்குச் சாத்தியமான வடிவமைப்புத் தீர்வுகளை முன்வைக்க ஒருங்கிணைக்கின்றது. கட்டடக்கலையின் வரலாறு, கோட்பாடு, கலாச்சாரம் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றில் அசல் படைப்புகளை உருவாக்கக் கூடியவர்களாக மாணவர்கள் ஆராய்ச்சித் திறனுடன் பயிற்றுவிக்கப்படுகின்றனர். கொள்முதல், கட்டட உற்பத்தி, சட்டம் மற்றும் நிதியின் சாத்தியக்கூறுகள் ஆகியவை தொடர்பில் கட்டடக் கலைஞர்களின் பங்கு தொடர்பில் ஆழமான புரிதலை மாணவர்கள் பெறுகின்றனர்.
இத்துறையில் ஆர்வமுள்ள மாணவர்கள் உலகத்தரம்வாய்ந்த கல்வித் திட்டத்தில் இணைந்து, உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தின் பங்காளர்களாகுமாறு SLIIT அழைக்கின்றது. கட்டடக்கலையில் பட்டம் பற்றிய மேலதிக தகவல்கள், விண்ணப்பிக்கும் முறை பற்றி அறிந்துகொள்ள www.sliit.lk என்ற இணையத்தளத்திற்கு விஜயம் செய்யவும் அல்லது 011 754 4801 என்ற தொலைபேசி இலக்கத்தைத் தொடர்புகொள்ளவும்.