ஏனையவை
மக்கள் போராட்ட முன்னணி வேட்புமனு தாக்கல்!

Oct 8, 2024 - 04:11 PM -

0

மக்கள் போராட்ட முன்னணி வேட்புமனு தாக்கல்!

அரகலய போராட்ட குழுவினர் உருவாக்கிய மக்கள் போராட்ட முன்னணி எனும் புதிய அரசியல் இயக்கம் எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளது.

 

புத்தளம் மாவட்ட செயலகத்தில் இன்று (08) மக்கள் போராட்ட முன்னணி சார்பில் அதன் செயற்பாட்டாளரான ஜெஹான் அப்புஹாமி மற்றும் வர்ணகுலசூரிய பிரியந்த பெர்னாந்து தலைமையில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.

 

இலங்கையின் எதிர்காலத்திற்கு புதிய அரசியல் அமைப்பினை அறிமுகப்படுத்தும் நோக்குடன் புதிய அரசியல் இயக்கத்தின் ஊடாக இந்த பயணத்தை நாம் ஆரம்பித்துள்ளோம் என வர்ணகுலசூரிய பிரியந்த பெர்னாந்து இதன்போது தெரிவித்தார்.

 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

பாராளுமன்றத்தில் இருந்தவர்கள் தங்களது வரப்பிரசாதங்களை, வருமானங்களையும் பாதுகாப்பதில்தான் அதிக கவனத்தை செலுத்தினார்கள். மக்கள் பற்றி அவர்கள் சிந்திக்கவில்லை. அதனால்தான் இந்த நாடு இந்தளவுக்கு நெருக்கடியை சந்தித்திருக்கிறது.

 

இந்த நாட்டில் எதிர்க்கட்சியாக இருந்தவர்கள் கூட அரசின் செயற்பாடுகளுக்கு எப்போது தலையசைக்கும் தரப்பினராகவே இதுவரை காலமும் இருந்து வந்தனர். அரச தரப்பினர்களுக்கும், எதிர்க்கட்சியினருக்கும் இடையே நல்ல உறவு காணப்பட்டது.

 

சஜித் பிரேமதாச, ரணில் விக்ரமசிங்க மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகியவர்களால் இந்த நாட்டில் ஒரு சக்தியுள்ள எதிர்க்கட்சியாக செயற்பட முடியாது.

எனவே, இந்த பொதுத் தேர்தலில் மக்கள் போராட்ட முன்னணிக்கு ஆதரவு தாருங்கள். எங்கள் அணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்யுங்கள்.

 

நாடுமுழுதும் அதிகப்படியான ஆசனங்களை பெற்று புதிய பாராளுமன்றத்தில் ஒரு சக்திமிக்க எதிர்க்கட்சியாக நாம் செயற்படுவோம்.

 

இந்த நாட்டில் இன்று முகம் மட்டும்தான் மாறியிருக்கிறது. மக்கள் எதிர்பார்த்த உண்மையான மாற்றம் ஏற்படவில்லை. அந்த மாற்றத்தை மக்கள் போராட்ட முன்னணி ஏற்படுத்தும் என தெரிவித்தார்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05