வடக்கு
பாராளுமன்ற தேர்தலில் களமிறங்கும் 'சர்வஜன அதிகாரம்'!

Oct 8, 2024 - 05:50 PM -

0

பாராளுமன்ற தேர்தலில் களமிறங்கும் 'சர்வஜன அதிகாரம்'!

தாயக மக்கள் கட்சி இம்முறை பாராளுமன்ற தேர்தலில் 'சர்வஜன அதிகாரம்' என்ற பெயரில் முன்னணியாக களமிறங்குகின்றது என தாயக மக்கள் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் அருண் சித்தார் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இன்று (08) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையின் பழமையான கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் 6 பிரதான கட்சிகள் இணைந்து ஒரு கூட்டணியாக இந்த தேர்தலை சந்திக்கின்றோம்.

ஆகவே இன்றிலிருந்து நாங்கள் சர்வஜன அதிகாரம் என்ற பெயரை பயன்படுத்துவோம். வாக்குச்சீட்டில் தாயக மக்கள் கட்சி என பிரசுரிக்கப்படாது அதில் சர்வஜன அதிகாரம் என்றே இருக்கும்.

'சர்வஜன அதிகாரம்' என்ற கட்சியின் பெயருக்கு பக்கத்தில் சின்னமாக 'பதக்கம்' இருக்கும். இது மிகவும் முக்கியமான விடயம். எங்களக்கு வாக்களிக்கும் மக்களுக்கு இதனை தௌிவு படுத்துவது மிகவும் முக்கியமானது என தெரிவித்தார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05