செய்திகள்
மேலும் 20 சீன பிரஜைகள் சிக்கினர்

Oct 9, 2024 - 11:37 AM -

0

மேலும் 20 சீன பிரஜைகள் சிக்கினர்

மேல் மாகாண புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பாணந்துறை, கோரக்கான பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த 20 சீன பிரஜைகள் பாணந்துறை வடக்கு பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

அவர்களிடமிருந்து 5 மடிக்கணினிகள், 437 கையடக்கத் தொலைபேசிகள், தராசுகள், 332 USB கேபிள்கள், 133 கையடக்க தொலைபேசி சார்ஜர்கள், 21 USB வயர் கோட், 17 ரவுட்டர்கள், 2 ஐபோன்கள் உள்ளிட்ட பல சாதனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

 

இவர்கள் வௌியில் இருந்து உணவுகளை எடுத்து வந்ததாகவும், இலட்சம் மாத வாடகை அடிப்படையில் அந்த விடுதியில் தங்கியிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 

இவர்கள் அனைவரும் இன்று (09) பாணந்துறை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

 

நிதிக்குற்றத்தை அவர்கள் செய்துள்ளார்களா? என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Comments
0

MOST READ
01
02
03
04
05