Oct 9, 2024 - 12:01 PM -
0
ஷங்கிரி-லா ஹம்பாந்தோட்டை 8 வது South Asian Travel Awards (SATA) 2024 நிகழ்வில் இரு மதிப்புமிக்க விருது அங்கீகாரங்களைச் சம்பாதித்து வெற்றியை நிலைநாட்டியுள்ளது. 2024 செப்டெம்பர் 20 வெள்ளிக்கிழமையன்று Aloft Kathmandu Thamel இல் இடம்பெற்ற விமரிசையான நிகழ்வில் 200 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டதுடன், தெற்காசியாவின் பிரயாண மற்றும் விருந்தோம்பல் துறையில் மிகச் சிறந்தவற்றை வெளிக்காண்பித்தவாறு, பல்வகைப்பட்ட பிரிவுகளில் விருது அங்கீகாரங்களுக்கு பெயரிடப்பட்ட 400 க்கும் மேற்பட்டவர்களுக்கு இந்நிகழ்வில் கௌரவமளிக்கப்பட்டுள்ளது. ஷங்கிரி-லா ஹம்பாந்தோட்டை, இலங்கையிலுள்ள முன்னணி குடும்ப உல்லாச விடுதி (Leading Family Resort in Sri Lanka) மற்றும் இலங்கையிலுள்ள முன்னணி திருமண நிகழ்வு உல்லாச விடுதி (Leading Wedding Resort in Sri Lanka) ஆகிய விருதுகளைத் தனதாக்கியுள்ளது.
விருந்தோம்பலில் மகத்துவத்தின் மீது இந்த உல்லாச விடுதி கொண்டுள்ள ஓயாத அர்ப்பணிப்பிற்கு இந்த விருது அங்கீகாரங்கள் சான்று பகருகின்றன. அதன் திறமைமிக்க அணியின் கடின உழைப்பு மற்றும் மறக்க முடியாத குடும்ப விடுமுறைகள் மற்றும் கனவுகள் நனவாகும் திருமண நிகழ்வுகளுக்கான இடம் ஆகியவற்றுக்காக ஷங்கிரி-லா ஹம்பாந்தோட்டை தொடர்ந்தும் நாடுகின்ற விருந்தினர்களின் விசுவாசம் ஆகியனவே இவ்விருது அங்கீகாரங்களுக்கான உந்துசக்தியாக அமையப்பெற்றன.
“தலைசிறந்த குடும்ப விடுமுறைகள் மற்றும் மறக்க முடியாத திருமண நிகழ்வுகளை வழங்குவதில் எமது ஓயாத அர்ப்பணிப்பிற்கான அங்கீகாரமாக கிடைக்கப்பெற்றுள்ள இந்த கௌரவம் ஷங்கிரி- லா ஹம்பாந்தோட்டையைப் பொறுத்தவரையில் உண்மையில் பெருமைக்குரிய ஒரு தருணமாகும்,” என்று ஷங்கிரி-லா ஹம்பாந்தோட்டையின் பொது முகாமையாளர் றிஃப்கான் ரஸீன் அவர்கள் குறிப்பிட்டார். “தெற்காசிய பிரயாண விருதுகள் 2024 நிகழ்வில் இந்த மதிப்புமிக்க விருது அங்கீகாரங்களைச் சம்பாதித்துள்ளமை விருந்தினர்களுக்கு தலைசிறந்த அனுபவங்களைத் தோற்றுவிப்பதில் எமது அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காண்பிக்கின்றது. இங்கு வருகை தருகின்ற ஒவ்வொரு விருந்தினரும் மறக்க முடியாத நினைவுகளுடன் திரும்பிச் செல்வதை உறுதி செய்து, விருந்தோம்பலில் புதிய தரஒப்பீட்டு நியமங்களை நிலைநாட்டுவதில் நாம் தொடர்ந்தும் கவனம் செலுத்தியுள்ளோம்,” என்று அவர் தொடர்ந்தும் குறிப்பிட்டார். ஷங்கிரி-லா ஹம்பாந்தோட்டையின் பிரதிநிதியாக கலந்துகொண்ட அதன் தொழிற்பாடுகளுக்கான பணிப்பாளர் இந்திக கோணவல அவர்கள் அணியின் சார்பில் விருதுகளை பெருமையுடன் ஏற்றுக்கொண்டார்.
குடும்பங்களுக்கும் ஜோடிகளுக்கும் விசேடமான ஒரு உல்லாச விடுதி
இலங்கையின் அழகிய தென்கரையோரத்தில் அமைந்துள்ள ஷங்கிரி-லா ஹம்பாந்தோட்டை, குடும்பங்களுக்கும், ஜோடிகளுக்கும் ஒப்பற்ற அனுபவத்தை வழங்குகின்றது. இந்த உல்லாச விடுதியிலுள்ள 274 நேர்த்தியான அறைகள் மற்றும் தங்குமறைத் தொகுதிகள் இந்து சமுத்திரத்தின் பிரமிக்க வைக்கும் காட்சிகளைக் கொண்டுள்ளதுடன், அமைதியான தோட்டங்கள் மற்றும் விசாலமான 18-துளைகள் கொண்ட கோல்ஃப் திடல் ஆகியன அமைதியாக விடுமுறையைக் களிப்பதற்கு பொருத்தமான சூழலைத் தோற்றுவிக்கின்றன.
ஷங்கிரி-லா ஹம்பாந்தோட்டையில் தங்குகின்ற குடும்பங்களுக்கு சாகசம் மற்றும் அமைதியாக ஓய்வெடுத்தல் ஆகியவற்றின் தனித்துவமான கலவை அனுபவம் கிடைக்கின்றது. தனித்துவமான Flying Trapeze, மயிர்கூச்செறியச் செய்யும் zip line மற்றும் ஏராளமான பொழுதுபோக்கு செயல்பாடுகளைக் கொண்ட Cool Zone Kids Club போன்ற மகிழ்வூட்டும் கவர்ச்சியான அம்சங்கள் இங்கு அனைவரும் ஏதோவொரு வகையில் தமது பொழுதைக் களிப்பதற்கான வாய்ப்பினை வழங்குகின்றன. அமைதியான தணிவை விரும்புகின்றவர்களுக்கு பாரம்பரிய இலங்கை மற்றும் ஆசிய சிகிச்சைகளுடன் புத்துணர்ச்சியூட்டும் அனுபவத்தை The Spa வழங்குவதுடன், இந்த உல்லாச விடுதியிலுள்ள பல்வேறு உணவகங்கள் செழுமையான உள்நாட்டு மற்றும் சர்வதேச உணவு வகைகளை வழங்குகின்றன.
திருமண நிகழ்வுகளுக்கு நேர்த்தியான இடம்
திருமண நிகழ்வுகளுக்கான முன்னணி இடம் என்ற விருது அங்கீகாரத்தைப் பெற்றுள்ள ஷங்கிரி- லா ஹம்பாந்தோட்டை, அதன் வியப்பூட்டும் திருமண ஏற்பாட்டு இடங்களுக்கு பெயர்பெற்று விளங்குகின்றது. காதல்சொட்டும் கடற்கரையோர கொண்டாட்டமானாலும் சரி, வெப்ப மண்டல தோட்டங்களுக்கு மத்தியில் நெருக்கமான ஒன்றுகூடலானாலும் சரி அல்லது மாபெரும் நிகழ்வு மண்டப வரவேற்பு நிகழ்வானாலும் சரி இந்த கவர்ச்சியான உல்லாசவிடுதிகள் ஜோடிகள் தமது கனவுகளை நனவாக்கும் திருமண ஏற்பாடுகளை மேற்கொள்ள முடியும். ஷங்கிரி-லாவின் பெயர்பெற்ற திருமண ஏற்பாடுகள் மூலமாக, பெயர்பெற்ற திருமண திட்டமிடல் சேவைகள், நேர்த்தியான உணவு விருந்து அனுபவங்கள் மற்றும் தனிப்பயனாக்கம் செய்யப்பட்ட ஏற்பாடுகள் ஆகியவற்றை வழங்கும் இந்த உல்லாச விடுதி, ஜோடிகளின் பயணம் தொடர்ந்து ஒன்றாக சிறப்பாக முன்னெடுக்கப்படுவதற்கு அனைத்து கொண்டாட்டங்களும் அழகாக பிரதிபலிக்கப்படுவதை உறுதி செய்கின்றது.
தெற்காசியாவின் விருந்தோம்பல் துறையில் மகத்துவத்தைக் கொண்டாடுகின்றது இப்பிராந்தியத்தின் பிரயாண மற்றும் விருந்தோம்பல் துறையில் மகத்துவத்தை அங்கீகரித்து, ஊக்குவிப்பதில் தெற்காசிய பிரயாண விருதுகள் (South Asian Travel Awards - SATA) முக்கிய பங்கு வகிக்கின்றன. நேபாளம் சுற்றுலாத்துறை சபை மற்றும் நேபாளம் ஹோட்டல்கள் சங்கம் ஆகியவற்றின் ஆதரவுடன் SATA இன் 2024 ஆம் ஆண்டு நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளதுடன், இத்தொழில்துறையில் மிகச் சிறந்த பங்களிப்புக்களை தொடர்ந்தும் சிறப்பாக வெளிக்காண்பித்து வருகின்றது. இவ்விருதுகள் நிகழ்வில் ஷங்கிரி-லா ஹம்பாந்தோட்டையின் வெற்றியானது தெற்காசிய விருந்தோம்பல் துறையில் முன்னோடி என்ற அதன் அந்தஸ்தை மேலும் ஆணித்தரமாக நிலைநாட்டியுள்ளது.
தனது மதிப்புமிக்க விருந்தினர்கள், அர்ப்பணிப்புடைய பணியாளர்கள் மற்றும் கூட்டாளர்கள் வழங்கும் தொடர்ச்சியான ஆதரவுக்காக ஷங்கிரி-லா ஹம்பாந்தோட்டை தனது ஆழமான நன்றிக்கடனை வெளிப்படுத்துகின்றது. இலங்கையின் மிகவும் அழகிய இடங்களில் ஒன்றில் மறக்க முடியாத அனுபவங்களைப் பெற்றும் வாய்ப்பினை விருந்தினர்களுக்கு கிடைக்கச் செய்யும் சேவைகளை வழங்குவதில் இந்த உல்லாச விடுதி தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் உள்ளது. கூடுதல் விபரங்களுக்கு தயவு செய்து www.shangri-la.com/hambantota இற்குச் சென்று, குடும்பங்களுக்கும், ஜோடிகளுக்கும் அபிமானத்திற்குரிய இடமாக இங்குள்ள மாயங்களை கண்டறியுங்கள்.