Oct 9, 2024 - 12:23 PM -
0
MGM Health Care, இந்தியாவின் சென்னை நகரில் அமைந்துள்ள புகழ்பெற்றதொரு பன்முகச் சிறப்பு சிகிச்சை மருத்துவமனை ஆகும். இலங்கையிலிருந்து வருகைத் தந்த மூன்று நோயாளிகளின் சிக்கலான பின்பகுதி குறைபாட்டுச் சீராக்கல்களுடன் கூடிய சத்திரச் சிகிச்சைகளை வெற்றிகரமாக மேற்கொள்ள முடிந்துள்ளதாக பெருமையுடன் அறிவித்துள்ளது.
இச் சத்திரச் சிகிச்சைகள் தொடர்பான சிக்கல்கள் குறித்து கருத்து தெரிவித்த முதுகுத்தண்டு சத்திரச்சிகிச்சை பிரிவின் பணிப்பாளரும் மூத்த ஆலோசகருமான டாக்டர் கருணாகரன், “Scoliosis எனப்படும் முதுகெலும்பின் பக்கவாட்டு வளைவு என்பது இளமை பருவத்தில் முதுகெலும்பு அசாதாரணமாக ஒரு பக்கமாக வளைந்து செல்லும் ஒரு நிலையாகும். முதுகுவலியை அனுபவிக்கும் பெரியவர்களுக்கு இயன் மருத்துவச் சிகிச்சை போன்ற தலையீடு தேவைப்படலாம்.
பிறவி தொராசிக் ஹைபோகைபோசிஸ் (Hypokyphosis) என்பது ஒரு சவாலான நிலைமை ஆகும். குறிப்பாக இளம் பருவத்தில் உடலில் தொடர் வளர்ச்சி ஏற்படுவதால், பல சந்தர்ப்பங்களில் நோயாளிகள் நாட்பட்ட வலி, செயற்திறன் குறைதல் மற்றும் இயலாமையினால் ஏற்படக்கூடிய விரக்தியுடனேயே எம்மிடம் வருகின்றார்கள். அன்றாட பணிகளைச் செய்வதில் திறன் மிகவும் குறைவடையும். இந்தச் சத்திரச்சிகிச்சைக்கு சிக்கலான திட்டமிடல் மற்றும் செயல்படுத்தல் தேவைப்பட்ட போதிலும் அதன் பெறுபேறுகளையிட்டு நாம் மகிழ்ச்சி அடைகின்றோம். நோயாளியின் இயக்கத்தை மீண்டும் பெற முடிதல், நாட்பட்ட வலி நிவாரணம் மற்றும் அவர்களின் செயற்பாடுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அனுபவிக்க முடிந்துள்ளது.” என்றார்.
MGM Health Care நிர்வாகம் கருத்து தெரிவிக்கையில் தாம் இவ்வாறான தீர்க்கமான 10 சந்தர்ப்பங்களை நிறைவு செய்துள்ளதோடு அவர்கள் அனைவருமே இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி பாடசாலைக் கல்வியில் ஈடுபடுவதற்கும், விளையாட்டில் ஈடுபடுவதற்கும், வாகனம் ஓட்டுவதற்கும் ஆற்றலை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.
077 3679122 எனும் தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொண்டு MGM முகவர் அலுவலகத்திடம் மேலதிக விபரங்களை பெற முடியும்.
கடந்த ஆண்டு முழுவதும் MGM Health Care மருத்துவமனையின் சிறப்பு சிகிச்சைக் குழுவினர் நம்பிக்கை மற்றும் சிகிச்சையகத்தின் தரத்தை உறுதிப்படுத்துவதற்கு நவீன மற்றும் சிக்கலான சத்திரசிகிச்சைகள் பலவற்றை மேற்கொண்டுள்ளனர். MGM Health Care மருத்துவமனை வலையமைப்பு நவீன தொழில்நுட்பம் மற்றும் மருத்துவச் சாதனங்களை கொண்டதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளதோடு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நோயாளர்களின் தேவை அறிந்து தரமான சிகிச்சைகளை அளிப்பதற்கு தயாராக உள்ளது.