சினிமா
'தளபதி 69' படத்தில் பாடல் வரி எழுதும் அசல் கோலார்

Oct 9, 2024 - 12:25 PM -

0

'தளபதி 69' படத்தில் பாடல் வரி எழுதும் அசல் கோலார்

நடிகர் விஜய் - எச் வினோத் கூட்டணியில் உருவாகும் படம் 'தளபதி 69'. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதில் விஜய்யுடன், பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

 

இத்திரைப்படம் 2025 ஒக்டோபர் மாதம் வெளியாக உள்ள நிலையில், சமீபத்தில் சென்னையில் இப்படத்தின் பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் விஜய், பூஜா ஹெக்டே, இயக்குனர் எச். வினோத், பாபி தியோல், மமிதா பைஜு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

படத்தின் படப்பிடிப்பு ஒரு பிரமாண்ட பாடலுடன் தொடங்கியதாக தெரிகிறது. அதன்படி, இப்பாடல் காட்சிகள் இன்னும் சில நாட்களில் முடிவடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

இந்நிலையில், இந்த பாடல் வரிகளை 'லியோ' படத்தில் 'நா ரெடிதான் வரவா' பாடலை எழுதி பாடியிருந்த அசால் கோலார் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இப்பாடலின் தலைப்பு 'ஒன் லாஸ்ட் சாங்' என்றும் கூறப்படுகிறது. 


இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Comments
0

MOST READ
01
02
03
04
05