உலகம்
லேட் நைட் ஷோவில் பீர் குடித்து CHILL செய்த கமலா ஹாரிஸ்!

Oct 9, 2024 - 01:19 PM -

0

லேட் நைட் ஷோவில் பீர் குடித்து CHILL செய்த கமலா ஹாரிஸ்!

அமெரிக்காவுக்கான அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் எதிர்வரும் நவம்பர் 5 ஆம் திகதி நடைபெற உள்ளது. இதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் ஜனாதபதி வேட்பாளராக தற்போதைய துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் களமிறக்கப்பட்டுள்ளார். வயது மூப்பு காரணமாக ஜனாதபதி ஜோ பைடன் தடுமாற்றத்தில் இருப்பது விமர்சிக்கப்பட்ட நிலையில் அவர் போட்டியிலிருந்து விலகி கமலாவை வேட்பாளராக அறிவித்தார்.

 

இந்திய - ஆபிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த கமலாவுக்கு அமெரிக்காவில் தற்போதைய நிலவரப்படி எதிர் வேட்பாளர் ட்ரம்பை விட ஆதரவு சற்று அதிகமாவே உள்ளதாக கருத்துக்கணிப்புகள் கூறுகிறன. சியானா கல்லூரி மற்றும் தி நியூயார்க் டைம்ஸ் நடத்திய தேசிய கருத்துக்கணிப்பில் ஹாரிஸ் 49 சதவீதம் முதல் 46 சதவீதம் வரை ஆதரவு பெற்று ட்ரம்பை விட முன்னிலையில் உள்ளார்.

 

சமீபத்தில் நடந்த நேருக்கு நேர் விவாதத்தில் ட்ரம்ப்பை திறம்பட சமாளித்ததது கமலாவின் தலைமைப் பண்பு மீது அனைவரையும் நம்பிக்கை கொள்ளச் செய்தது. தற்போது தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் கமலா, லேட் நைட் ஊடக நேர்காணலில் பங்கேற்று ஜாலியாக பலதரப்பட்ட விடயங்கள் குறித்து தொகுப்பாளர் ஸ்டெப்பான் கால்பெர்ட்டுடன் விவாதித்துள்ளார்.

 

அந்த நிகழ்ச்சியில் போது மில்லர் ஹை லைப் என்ற பீர் பானம் கமலாவுக்கு வழங்கப்பட்டது. கடைசியாக பேஸ் பால் போட்டியின் பொது குடித்தது என கூறியவாறு, அந்த டின் கேன் பாட்டிலைக் கமலா ஹாரிஸ் கையில் எடுத்து உடைத்து சீர்ஸ் சொல்லி குடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Comments
0

MOST READ
01
02
03
04
05