விளையாட்டு
டெஸ்ட் தொடரில் இருந்து வில்லியம்சன் விலகல்!

Oct 9, 2024 - 01:24 PM -

0

 டெஸ்ட் தொடரில் இருந்து வில்லியம்சன் விலகல்!

நியூசிலாந்து அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் கேன் வில்லியம்சன் காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

 

நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.

ஒக்டோபர் 16ஆம் திகதி முதல் டெஸ்ட் தொடர் ஆரம்பமாகிறது.

 

நியூசிலாந்து கிரிக்கெட் சபை, "கேன் வில்லியம்சன் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து தொடையின் தசைப்பிடிப்பு காரணமாக விலகுகிறார். இவருக்குப் பதிலாக மார்க் சாப்மன் அணியில் இணைகிறார்" எனக் கூறியுள்ளது.

 

நியூசிலாந்து அணியின் தேர்வாளர் சாம் வெல்ஸ், "காயத்துடன் விளையாடிய கேன் வில்லியம்சனுக்கு இன்னும் பாதிப்பு பெரிதாக ஆகாமல் தடுக்கவே அவரை ஓய்வெடுக்க வைக்கிறோம். இதுதான் மருத்துவர்கள் தரப்பில் இருந்து எங்களுக்கு கொடுக்கப்பட்ட சிறந்த அறிவுரையாகும்" என்றார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05