வணிகம்
Prime Residencies இன் The Seasons Colombo 8 இன் அடிக்கல் நாட்டலை கொண்டாடியது

Oct 9, 2024 - 02:01 PM -

0

Prime Residencies இன் The Seasons Colombo 8 இன் அடிக்கல் நாட்டலை கொண்டாடியது

இலங்கையின் முன்னணி சொகுசு ரியல் எஸ்டேட் நிறுவனமான Prime Lands Residencies PLC, தனது புதிய அதி - சொகுசு நிர்மாணத் திட்டமான The Seasons Colombo 8 இன் அடிக்கல் நாட்டலை கொண்டாடியது. இந்த பிரத்தியேகமான அதி-சொகுசு வாழிட அனுபவத்தை வழங்கும் இந்தத் திட்டத்தின் நிர்மாணப் பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிப்பதை அடிக்கல் நாட்டும் வைபவம் உணர்த்தியிருந்தது.

இந்நிகழ்வில் Prime Group இன் தவிசாளர் மற்றும் இணை தலைமை அதிகாரி, விசேட விருந்தினர்கள் மற்றும் பங்காளர்கள் என பலரும் கலந்து கொண்டனர். குரூப்பின் அதி-சொகுசு வதிவிடப் பிரிவான One Collection ஐச் சேர்ந்த விசேட சமூக அங்கத்தவராக திகழ்வதற்கான மற்றுமொரு விறுவிறுப்பான பயணமாக அமைந்திருந்தது.

துறையில் 30 வருட கால அனுபவத்தைக் கொண்டுள்ள Prime Group, உயர் தரம் வாய்ந்த செயற்திட்டங்களை பெற்றுக் கொடுத்து வீட்டு உரிமையாளர்களின் நம்பிக்கையை வென்றுள்ளது. இந்த புதிய செயற்திட்டத்தின் நிர்மாணப் பணிகள் கடினமான நியமங்களை பின்பற்றி அமைந்திருக்கும் என்பதுடன், உயர் தர வடிவமைப்பு மற்றும் நிர்மாணப் பணிகளின் போது ஒவ்வொரு விவரங்களிலும் கவனம் செலுத்தல் போன்றன தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும்.

மக்கள் செறிந்து வாழும் கொழும்பு 08 இல் சந்திரலேகா மாவத்தை மற்றும் ஃபெயார்ஃபீல்ட் கார்டின்ஸ் ஆகியவற்றுக்கிடையே அமைந்துள்ள The Seasons Colombo 8, 44 வசிப்பிடங்களை வழங்கும் திட்டமாகும். ஒவ்வொரு இல்லமும் 2000 சதுர அடிப் பரப்பில் அமைந்திருக்கும். சௌகரியம் மற்றும் பிரம்மாண்டம் ஆகியவற்றை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தத் திட்டம், நவீன வசதிகளுடன், பிரத்தியேகமான களஞ்சியப்படுத்தல் தீர்வுகளைக் கொண்ட இல்லமொன்றை கொள்வனவு செய்ய எதிர்பார்ப்போரின் சிறந்த தெரிவாக அமைந்திருக்கும்.

இந்தத் திட்டம் தொடர்பில் Prime Group தவிசாளர் பிரேமலால் பிராஹ்மனகே கருத்துத் தெரிவிக்கையில், “எமது வாடிக்கையாளர்களுக்கு செவிசாய்த்து, அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற நாம் முன்வந்துள்ளோம். அதிக இடவசதி படைத்த, சௌகரியமான வாழிட சூழலை ‘The Seasons Colombo 8’ வழங்குவதுடன், 44 இல்லங்களை கொண்டிருக்கும். புதிய தொழில்நுட்ப அம்சங்களைக் கொண்டு, மக்கள் செறிந்து வாழும் பகுதியில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.” என்றார்.

நிறுவனத்தின் நோக்கான அதி-சொகுசு வாழிடம் என்பதை The Seasons Colombo 8 பிரதிபலிப்பதாக அமைந்துள்ளதுடன், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை விஞ்சும் வகையில் சகல அம்சங்களும் அமைந்திருக்கும். இலங்கையின் முதலாவது rooftop இல் wave pool, சகல வசதிகளையும் கொண்ட ஜிம்னாசியம், bottle bank வசதியுடன் executive lounge, கேமிங் பகுதி மற்றும் karaoke lounge, a business lounge மற்றும் சந்திப்பு அறை போன்றவற்றுடன் walking path மற்றும் yoga deck போன்ற உலகத் தரம் வாய்ந்த அம்சங்களை கொண்டிருக்கும்.

Prime Lands Residencies PLC இன் தலைமை அதிகாரி சந்தமினி பெரேரா கருத்துத் தெரிவிக்கையில், The Seasons Colombo 8, உடன், சொகுசு வாழிட அனுபவத்தை நாம் மாற்றியமைக்க முன்வந்துள்ளதுடன், கொழும்பின் வளர்ந்து வரும் ரியல் எஸ்டேட் சந்தையில் நீண்ட கால அடிப்படையிலான பெறுமதி வாய்ந்த சொத்தை எதிர்பார்ப்பவருக்கு அதிசிறந்த முதலீட்டு வாய்ப்பை பெற்றுக் கொடுக்க முன்வந்துள்ளோம். முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடம், உலகத் தரம் வாய்ந்த உள்ளம்சங்கள் மற்றும் நுணுக்கமாக செதுக்கப்படும் வடிவமைப்புகள் போன்றவற்றுடன் வீட்டு உரிமையாளர்களுக்கு சொகுசான வசிப்பிட அனுபவத்தை வழங்கும் வகையில் இந்தத் திட்டம் அமைந்திருக்கும்.” என்றார்.

The Seasons Colombo 8 இல் உயர் தர பலகையிலான தள அமைப்பு, designer walk-in closets, முழுமையாக பொருத்தப்பட்ட சமையலறை பான்ரிகளுடன், அடுத்த தலைமுறை சாதனங்கள், smart home automation கட்டமைப்புகள் மற்றும் heated town railing போன்றன அடங்கியிருக்கும். கொழும்பின் மையத்தில் ஒப்பற்ற வாழிட அனுபவத்தை பெற்றுக் கொடுக்கும் வகையில் இந்த அம்சங்கள் அமைந்திருக்கும்.

அதன் பிரத்தியேகமான அமைவிடம், வடிவமைப்பு மற்றும் சிறப்புக்கான Prime Group இன் கீர்த்தி நாமம் போன்றவற்றுடன், The Seasons Colombo 8 என்பது இலங்கையின் ரியல் எஸ்டேட் கட்டமைப்பில் நன்மதிப்பை பெற்ற முகவரியாக அமைந்திருக்கும்.

The Seasons Colombo 8 தொடர்பான மேலதிக தகவல்களுக்கு, தொடர்புகளுக்கு: 0702 777 777

Comments
0

MOST READ
01
02
03
04
05