Oct 10, 2024 - 07:27 PM -
0
ஐக்கிய ஜனநாயக குரல் சார்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் இன்று (10) காலை பதுளை மாவட்ட செயலகத்தில் தனது வேட்பு மனுவினை தாக்கல் செய்துள்ளார்.
நேற்று (09) கொழும்பு தாஜ்சமுத்ரா ஹோட்டலில் ரஞ்சன் ராமநாயக்க தலைமையில் புதிய கட்சியாக ஐக்கிய ஜனநாயக குரல் என்ற கட்சி அங்குராட்பணம் செய்து வைக்கப்பட்டது.
இக்கட்சியின் ஒலிவாங்கி சின்னம் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட நிலையில் இன்று காலை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
--