Oct 11, 2024 - 05:51 PM -
0
பாராளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் சுயேட்சை குழுவாக போட்டியிடுவதற்கான வேட்புமனுவை ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பு இன்று (11) காலை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் கையளித்தனர்.
வேட்புமனு தாக்கல் செய்த பின்பு யாழ்ப்பாணம் முற்றவெளியில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவாலயத்தில் சென்ற வேட்பாளர்கள் அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செல்வா நினைவிடத்திற்கு சென்று மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
ஐனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தலைமையிலா சுயேட்சை குழுவில் தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஜங்கரநேசன், தமிழரசுக் கட்சியினைச் சேர்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈ. சரவனபவண் உள்ளிட்டவர்கள் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
--