Oct 12, 2024 - 12:01 PM -
0
20 ஆண்டுகளாக தனது மனைவி, ஏழு குழந்தைகள் மற்றும் மாமியார் ஆகியோரை பாலியல் துஷ்பிரயோகம் செய்து வீட்டு சிறையில் அடைத்ததாக குற்றம் சாட்டப்பட்ட 54 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரேசிலின் நோவோ ஓரியண்டேயில் உள்ள வீட்டு சிறையில் இருந்து மகள் ஒருவர் தப்பித்து வந்து பொலிஸாரிடம் தந்தையின் துன்புறுத்தல்களை கூறியுள்ளார். அந்த நபர் தனது மனைவியை திருமணம் செய்ததில் இருந்து வீட்டு சிறையில் வைத்ததாக கூறப்படுகிறது.
மனைவியை அத்தியாவசிய தேவைக்கு மட்டும் தன்னுடன் வெளியே அழைத்து செல்வார். அண்டை வீட்டுக்காரர்கள் எவருக்கும் அவரது மனைவியைத் தெரியாது. ஏன் உறவினர்கள் கூட அப்பெண்ணை அணுகவில்லையாம்.
3 முதல் 22 வயதுக்குட்பட்ட ஏழு குழந்தைகளும் அந்த நபரால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் குளிப்பதையும் ஆடை அணிவதையும் பார்க்க அந்த நபர் வீட்டின் சுவர்களில் துளைகளை துளைத்ததாக மகள்கள் கூறியுள்ளனர்.
மேலும் கருக்கலைப்பு செய்வதற்கு முன்பு அந்த நபர் அவர்களை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும் சமீபத்தில் இறந்து போன தனது மாமியாரை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படுகிறது. உடல் நலக்குறைவு ஏற்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்படாததால் அவர் உயிரிழந்ததாக பொலிஸார் கூறுகின்றனர்.
மகள்களில் ஒருவர் அந்நபருக்கு தூக்க மாத்திரை கொடுத்தபோதுதான் தப்பித்து பொலிஸில் புகார் கொடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து கைதான அந்த நபர் தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஆனால் அந்த நபர் அவர் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளதாகவும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.