விளையாட்டு
DSP-ஆக பதவியேற்றுக் கொண்ட முகமது சிராஜ்!

Oct 12, 2024 - 12:05 PM -

0

DSP-ஆக பதவியேற்றுக் கொண்ட முகமது சிராஜ்!

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ். கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்திய அணியில் இடம்பெற்று இருந்தார்.

 

டி20 உலகக் கிண்ண தொடரை இந்திய அணி வென்ற நிலையில், இந்திய வீரர் முகமது சிராஜ்-க்கு க்ரூப் 1 அரசு பணி, ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் சுமார் 600 சதுர அடி பரப்பளவு கொண்ட நிலம் வழங்குவதாக தெலுங்கானா அமைச்சர் ரேவந்த் ரெட்டி அறிவித்து இருந்தார்.

 

அந்த வகையில், தெலங்கானா மாநில காவல் துறை துணை கண்காணிப்பாளராக முகமது சிராஜ் நேற்று (11) பதவியேற்றுக் கொண்டார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05