வணிகம்
Daraz Sri Lanka மிகச் சிறந்த விலைகளில் தனது தளத்தில் Choice by AliExpress ஐ அறிமுகம்

Oct 15, 2024 - 11:53 AM -

0

Daraz Sri Lanka மிகச் சிறந்த விலைகளில் தனது தளத்தில் Choice by AliExpress ஐ அறிமுகம்

நாட்டில் முன்னணி ஒன்லைன் (இணைய வழி) சந்தைப்படுத்தல் தளமாக விளங்கும் Daraz Sri Lanka, தனது தளத்தில் புதிய Choice தெரிவொன்றை அறிமுகப்படுத்துவதற்காக AliExpress Choice உடன் ஒத்துழைத்துச் செயற்படவுள்ளது. இதன் மூலமாக கொள்வனவாளர்கள் தற்போது நவநாகரிகம் (கைக்கடிகாரங்கள், சூரிய ஒளிப் பாதுகாப்பு கண்ணாடிகள், ஆபரணங்கள், பேக் போன்றவை) , ஆரோக்கியம் மற்றும் அழகு சார்ந்த பிரபலமான வகைகளில் 1 மில்லியனுக்கும் மேற்பட்ட உச்ச தரத்திலான தயாரிப்புக்களை தெரிவு செய்யும் வாய்ப்பினைப் பெற்றுள்ளனர்.

வாடிக்கையாளர்கள் மத்தியில் பரிமாண மாற்றம் கண்டு வருகின்ற தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் 2023 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட AliExpress Choice ஆனது சிறந்த கொள்வனவு அனுபவத்திற்காக விசேடமாக தயாரிக்கப்பட்ட, மகத்தான பெறுமதி கொண்ட தயாரிப்புக்கள் மற்றும் மேம்பட்ட சேவைகளை வழங்குகின்றது. Choice ஆனது தற்போது 50 க்கும் மேற்பட்ட சந்தைகளில் பயனர்களுக்கு கிடைக்கப்பெறுகின்றது.

இவ்வாறே இலங்கையிலும் Daraz இன் புதிய Choice வழிமுறையானது பணத்திற்கான சிறந்த மதிப்பு, இலவச விநியோகம் மற்றும் 14 தினங்களுக்குள் அறவீடு இன்றி அவற்றை மீளத் திருப்புதல்* ஆகியவற்றுடன் AliExpress Choice இல் கிடைக்கும் தெரிவுகள் அடங்கலாக, பல்வகைப்பட்ட தயாரிப்புக்களை வழங்குகின்றது. மிகவும் கூடுதலாக நாடப்படுகின்ற தயாரிப்புக்களை சிக்கனமான விலைகளுடன் வழங்கி, Daraz பயனர்களுக்கு மேம்பட்ட கொள்வனவு அனுபவத்திற்கு இக்கூட்டாண்மை உத்தரவாதமளிக்கின்றது.

AliExpress Choice வழங்கும் தற்போதைய தயாரிப்பு வகைகளுக்குப் புறம்பாக, உள்நாட்டு நுகர்வோரின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக இன்னும் கூடுதலான அளவில் அன்றாட அத்தியாவசியப் பொருட்களை உள்வாங்கி தனது Choice வகையை Daraz விரிவுபடுத்தியுள்ளது. Hemas மற்றும் Ceylon Biscuits போன்ற உள்நாட்டு வர்த்தகநாமங்களின் விரைவாக விற்றுத் தீரும் நுகர்வோர் தயாரிப்புக்கள், Unilever, Reckitt Benckiser போன்ற நம்பிக்கையை வென்றெடுத்துள்ள சர்வதேச ஆரோக்கிய மற்றும் அழகு பராமரிப்பு வர்த்தகநாமங்கள் மற்றும் Hayleys ஆல் விநியோகிக்கப்படுகின்ற வர்த்தகநாமங்கள் (Gillette, Mabroc, Head & Shoulders, Olay, Pampers, Tide, Vicks, மற்றும் Whisper போன்றவை) ஆகியனவும் தற்போது உள்ளடக்கப்பட்டுள்ளன. இந்த விரிவுபடுத்தல் நடவடிக்கையானது இலங்கை நுகர்வோருக்கு கிடைக்கும் தெரிவுகளை மேலும் வளப்படுத்தியுள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக, Lightening Deals, Early Bird Offers போன்ற ஊக்குவிப்புச் சலுகைகள் மூலமாக பிரத்தியேகமான சலுகைகளை கொள்வனவாளர்கள் பெற்றுப் பயனடைய முடிவதுடன், அவர்களுக்கு கணிசமான சேமிப்புக்களுக்கும் வழிவகுக்கின்றது.

“எமது வாடிக்கையாளர்கள் எப்போதும் சிக்கனமான விலைகளில் உயர் தர தயாரிப்புக்களை நாடி வருகின்ற நிலையில், AliExpress Choice தயாரிப்புக்களின் அறிமுகத்துடன் அவர்களுடைய எதிர்பார்ப்புக்களை மிஞ்சும் வகையில் சேவைகளை வழங்குவதற்கு நாம் அர்ப்பணிப்புடன் உள்ளோம். இலங்கை நுகர்வோருக்கு ஏற்ற பல நூற்றுக்கணக்கான வகைகளை மிகச் சிறந்த மதிப்பில் வழங்கும் எமது தயாரிப்புக்களின் தெரிவையிட்டு நாம் பெருமை கொள்கின்றோம். நுகர்வோரின் கொள்வனவு அனுபவத்தை மேம்படுத்துவது குறித்த எமது தொடர் முயற்சிகளின் அங்கமாக, உயர் ரக மற்றும் சிக்கனமான விலைகளில் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு அனைவரும் நாடுகின்ற இடமாக Daraz ஐ மாற்றியவாறு, எதிர்வரும் மாதங்களில் மேலும் பல புதிய சிறப்பம்சங்கள் மற்றும் பிரத்தியேகமான சலுகைகளை தொடர்ந்து அறிமுகப்படுத்துவதற்கு நாம் திட்டமிட்டுள்ளோம்,” என்று Daraz Sri Lanka முகாமைத்துவப் பணிப்பாளரான எசான் சாயா அவர்கள் குறிப்பிட்டார்.

Homepage இன் மூலமாக நேரடியாகவோ அல்லது Choice தயாரிப்புக்களை தேடலின் மூலமாகவோ அடங்கலாக, Daraz app இன் பல்வேறு தொடுபுள்ளிகள் மூலமாக Choice section ஐ இலகுவாக அணுக முடியும் என்பதுடன், சீரான மற்றும் பயனர்நேய பிரவுசிங் அனுபவத்தை உறுதி செய்கின்றது. பொருட்களின் விநியோக காலத்திற்கு ஏற்றவாறு (ஒன்று முதல் மூன்று தினங்கள் வரையான விரைவான காலப்பகுதி) வேறுபடுத்தப்பட்ட தயாரிப்புக்களை தெரிவு செய்வதற்கான dual tabs வழிமுறைகளையும் இது கொண்டுள்ளது.

*குறிப்பு: நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டது.

Daraz குழுமம் தொடர்பான விபரங்கள்

2015 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட Daraz ஆனது பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, நேபாளம் மற்றும் மியன்மார் ஆகிய நாடுகளில் முன்னணி மின்-வர்த்தக (e-commerce) தளமாகத் திகழ்ந்து வருகின்றது. விற்பனையாளர்களுக்கும், நுகர்வோருக்கும் அதிநவீன சந்தைப்படுத்தல் தள தொழில்நுட்பத்தை வழங்கி வலுவூட்டுவதுடன், 500 மில்லியன் மக்களுடன், வேகமாக வளர்ச்சி கண்டு வருகின்ற பிராந்தியத்தில் தனது சேவைகள் மீது கவனம் செலுத்தியுள்ளது. மின்-வர்த்தகம், வழங்கல் ஏற்பாடு, கொடுப்பனவு மற்றும் நிதிச் சேவைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒருங்கிணைக்கப்பட்ட உட்கட்டமைப்புடன் கட்டியெழுப்பப்பட்டுள்ளதுடன், வர்த்தகத்தின் வலிமையினூடாக தெற்காசிய சமூகங்களை மேம்படுத்தி, திளைக்கச் செய்யும் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட கொள்வனவு அனுபவத்தை வழங்குவதே இந்நிறுவனத்தின் நோக்கம்.

மேலதிக தகவல் விபரங்களுக்கு தயவு செய்து, www.daraz.com என்ற இணையத்தளத்தைப் பாருங்கள் அல்லது, நிறுவனம் குறித்த உடனுக்குடன் செய்திகளுக்கு LinkedIn (www.linkedin.com/company/daraz/) மூலமாக Daraz உடன் தொடர்பில் இருங்கள்.  

Comments
0

MOST READ
01
02
03
04
05