வடக்கு
சனத்தொகையில் அதிகளவில் பெண்களே காணப்படுகிறார்கள்!

Oct 15, 2024 - 12:15 PM -

0

சனத்தொகையில் அதிகளவில் பெண்களே காணப்படுகிறார்கள்!

பாதிக்கப்பட்டவர்களுக்கு இருக்கிற பிரச்சினைகளை நேரடியாக அனுபவித்தவர்களே பாராளுமன்றம் சென்று கூறுவது சிறப்பானது என சட்டத்தரணி வைஷ்ணவி சண்முகநாதன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசியப் பரப்பில் பெண்களின் வகிபாகம் மிகக் குறைவாகவே காணப்படுகிறது.

இலங்கையின் சனத்தொகையில் அதிகளவில் பெண்களே காணப்படுகிறார்கள். தமிழ் தேசிய பரப்பிலும் கூட தமிழர் சனத்தொகையிலும் பெண்கள் அதிகமாக காணப்படுகிறார்கள்.

பெண்களுக்கு வழங்கப்படுகின்ற அங்கீகாரம், பாதுகாப்பு அவர்கள் தமிழ் தேசிய பரப்பில் தங்களுடைய பங்கினை வழங்குவதற்கான களம் தமிழ் தேசிய அரசியலில் காணப்படுகிறதா என்பது கேள்வியாக உள்ளது என தெரிவித்தார்.

--

Comments
0

MOST READ