Oct 15, 2024 - 03:05 PM -
0
வெல்லவாய ஹந்தபானாகல வீதியில் ஹந்தபானாகல நீர்த்தேக்கத்திற்கு அண்மித்த பகுதியில் நேற்று (14) இரவு இரட்டை கெப் வண்டியும் மோட்டார் சைக்கிளும் மோதியதில் விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
வெல்லவாய பிரதேசத்தை சேர்ந்த 59 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
காயமடைந்த நபர் வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் கெப் வண்டியின் சாரதி வெல்லவாய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லவாய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.