Oct 15, 2024 - 05:56 PM -
0
போபத்தலாவ ஹரித குன்றில் முகாமிட்டிருந்த பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளது.
ருஹுனு பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று இன்று (15) இந்த குளவி தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதுடன், காயமடைந்த 06 மாணவர்கள் பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மாணவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.