Oct 16, 2024 - 02:07 PM -
0
யாழ்ப்பாணம் - நவாலி பகுதியில் உள்ள பொலிஸ் உத்தியோகத்தரது வீட்டில் நகைகள் மற்றும் ஒரு தொகை பணம் என்பன களவாடிய சம்பவம் தொடர்பாக சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு நேற்று (15) விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை கைது செய்து குறித்த நபரிடம் இருந்து மூன்றரைப் பவுண் நகையை யாழ்ப்பாண பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மீட்டுள்ளனர்.
கடந்த வாரம் வீட்டின் குளியலறை ஊடாக உள்நுழைந்த திருடர்கள், ஆறரை பவுண் நகை மற்றும் 29 ஆயிரம் ரூபா பணம் என்பவற்றை திருடிச் சென்றனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சந்தேக நபரை கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்தினர்.
பிரதான சந்தேக நபரை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
--