செய்திகள்
சிலாபம் பகுதியில் சிக்கிய வௌிநாட்டு பிரஜைகள்

Oct 16, 2024 - 02:58 PM -

0

சிலாபம் பகுதியில் சிக்கிய வௌிநாட்டு பிரஜைகள்

சிலாபம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரணவில வீதியிலுள்ள புத்தளம் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் பேரில் ஹோட்டல் ஒன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் தங்கியிருந்த வெளிநாட்டு பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

நேற்று (15)  கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்களில் 4 மலேசிய ஆண்கள், 3 எத்தியோப்பிய ஆண்கள் மற்றும் ஒரு பெண், கென்யா பெண்ணொருவர் மற்றும் ஒரு சீன ஆண் ஒருவர் அடங்குவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

 

இணையவழி பண மோசடியில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 20 கணனிகள், 3 இணைய ரவுட்டர்கள் மற்றும் 282 கையடக்கத் தொலைபேசிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

 

சம்பவம் தொடர்பில் புத்தளம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05