Oct 16, 2024 - 03:12 PM -
0
லசந்த விக்கிரமதுங்க, பிரதீப் எக்னலிகொட மற்றும் தாஜுதீன் கொலை வழக்கு விசாரணைகள் ஏறக்குறைய நிறைவடைந்ததன் காரணமாகவே, இவற்றை தவிர்த்து பிரதான 7 குற்ற சம்பவங்கள் தொடர்பான வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்த அரசாங்கம் பரிந்துரைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், ஏனைய கொலைகள் தொடர்பான விசாரணைகளும் எதிர்காலத்தில் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
தற்போது நடைபெற்று வரும் குற்ற விசாரணைகள் தொடர்பான அமைச்சரவை தீர்மானத்தை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் விஜித ஹேரத் மேற்கண்டவாறு தெரிவித்தார்.