செய்திகள்
கொலை சம்பவம் தொடர்பில் ஐவர் கைது

Oct 16, 2024 - 03:15 PM -

0

கொலை சம்பவம் தொடர்பில் ஐவர் கைது

ஜா-எல ஏக்கல பிரதேசத்தில் நபர் ஒருவரைக் கொன்ற சம்பவம் தொடர்பில் ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

ஏக்கல பிரதேசத்தில் வீதியொன்றில் சென்று கொண்டிருந்த நபர் ஒருவரை கூரிய ஆயுதங்களால் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

கொலையை செய்த சந்தேக நபர் மற்றும் கொலைக்கு உதவிய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கொலைக்கு பயன்படுத்திய இரண்டு மன்னா கத்திகள் மற்றும் பல தடிகள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

 

கைது செய்யப்பட்டவர்கள் 22,33,45,48 மற்றும் 65 வயதுக்குட்பட்ட ஜா-எல பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

Comments
0

MOST READ