செய்திகள்
மாதம்பிட்டிய பகுதியில் துப்பாக்கிச்சூடு

Oct 16, 2024 - 04:40 PM -

0

மாதம்பிட்டிய பகுதியில் துப்பாக்கிச்சூடு

கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதம்பிட்டியவில் உள்ள மயானத்திற்கு அருகில் முச்சக்கர வண்டியில் பயணித்த நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

 

குறித்த நபர் முச்சக்கரவண்டியின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த போது இனந்தெரியாத ஒருவரால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

இன்று பிற்பகல் 3 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதுடன், காயமடைந்தவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

 

உயிரிழந்தவர் 35 வயதுடைய மிஹிஜய பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

 

காரில் வந்த அடையாளம் தெரியாத நபர்களால் குறித்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05