Oct 16, 2024 - 09:27 PM -
0
துருக்கியில் இன்று 5.9 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. மிகப்பெரிய அளவில் அச்சம் நிலவிய நிலையில், சேதம் அதக அளவில் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் மலாத்யா மாகாணத்தில் உள்ள காலே என்ற நகரில் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கும் அருகில் உள்ள தியார்பகீர், எலாஜிக், சன்லியுர்ஃபா மற்றும் துன்செலி மாகாணத்திலும் உணரப்பட்டுள்ளது. சிரியாவின் வடக்குப்பகுதிகளில் உள்ள ஒரு சில இடங்களிலும் உணரப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் மக்கள் வீட்டை விட்டு வெளியேறினர். சுமார் ஒரு மணி நேரம் கழித்தும் வீட்டிற்கு திரும்ப மக்கள் அச்சப்பட்டு தெருக்கள் மற்றும் பூங்காக்களில் தஞ்சம் அடைந்தனர். மலாத்யா மற்றும் எலாஜிக் பகுதிகளில் பாடசாலைகளை மூட உத்தரவிடப்பட்டது.