செய்திகள்
பொலிஸ் அதிகாரிக்கு இலஞ்சம் - சந்தேகநபர் கைது

Oct 17, 2024 - 09:45 AM -

0

பொலிஸ் அதிகாரிக்கு இலஞ்சம் - சந்தேகநபர் கைது

இலஞ்சம் கொடுக்க முயன்ற நபரை மட்டக்குளி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

 

நேற்றைய தினம் (16) மட்டக்குளி பொலிஸ் நிலையத்தின் பதில் நிலைய பொறுப்பதிகாரிக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அந்த பொலிஸ் பகுதியில் போதைப்பொருள் கடத்தலை மேற்கொள்ள சந்தர்ப்பம் வழங்குமாறு கோரியுள்ளார்.

 

சந்தேகநபர் மாதாந்தம் 100,000 ரூபா/= இலஞ்சமாக வழங்க விரும்புவதாகவும் பதில் நிலைய கட்டளைத் தளபதியிடம் கூறியுள்ளார்.

 

இது தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு பதில் நிலைய பொறுப்பதிகாரி அறிவித்துள்ளார்.

 

இதன்படி பதில் நிலைய பொறுப்பதிகாரி, சந்தேகநபரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துள்ள நிலையில், சந்தேகநபர் 50,000 ரூபாவை பதில் நிலைய பொறுப்பதிகாரிக்கு வழங்க முற்பட்ட போது, ​​இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டார்.

 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மட்டக்குளி பிரதேசத்தை சேர்ந்த 50 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05