Oct 17, 2024 - 01:28 PM -
0
கிழக்கு மாகாண ஆளுநருக்கும் இலங்கை கடற்படையின் கிழக்கு கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோவுக்கு இடையிலான சந்திப்பு நேற்று (16) கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
கிழக்கு கடற்படை தளபதி புதிய ஆளுநருக்கு முதலில் வாழ்த்து தெரிவித்து சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டார்.
கிழக்கு மாகாணம் சிங்களவர்கள், தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் வாழும் பாரிய கரையோரப் பிரதேசம் இருப்பதால், அந்த மாகாணத்தில் உள்ள கடல் பாதுகாப்பு மற்றும் மீனவர்களின் பாதுகாப்பு குறித்து கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
--