Oct 17, 2024 - 02:15 PM -
0
சுற்றுலா நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மிக மோசமான சாதனையை படைத்துள்ளது.
நேற்று ஆரம்பமாகவிருந்த இந்த போட்டி மழைக் காரணமாக தடைப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று போட்டி ஆரம்பமான நிலையில், நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிய இந்திய அணி 31.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 46 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
இதன்படி சொந்த மண்ணில் டெஸ்ட் போட்டி ஒன்றில் இந்திய அணி பெற்றுக்கொண்ட குறைந்த ஓட்டங்கள் இதுவாகும்.
இந்திய அணி சார்பில் Rishabh Pant மாத்திரமே அதிகபட்சமாக 20 ஓட்டங்களை பெற்ற நிலையில், ஏனைய அனைத்து வீரர்களும் சொற்ப ஓட்டங்களுக்கே ஆட்டமிழந்தனர்.
பந்து வீச்சில் நியூசிலாந்து அணி சார்பில் Matt Henry 05 விக்கெட்டுக்களையும், William O’Rourke 04 விக்கெட்டுக்களையும், Tim Southee 01 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.